செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியை சேர்ந்த தம்பதியர் விஜய்- அருணா. இவர்களின் மகன் ரட்சன். ஐந்து வயது. திங்கிரிட் அகாடமி பள்ளியில் யூ.கே.ஜி.மாணவன். ரட்சன் படிப்பில் படு சுட்டி. சிறு வயது முதல் நீச்சலில் அபார ஆர்வம் கொண்டதால் ரட்சனை நீச்சல் பயிற்றுனர் இல்லாமல் தந்தை விஜய்யே நீச்சல் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். தாங்கள் வசிக்கும் பிருந்தாவன் குடியிருப்பு பகுதி நீச்சல் குளத்திலேயே மகனை பயிற்றுவித்தார்.
கடந்த ஒருமாதமாக நீச்சல் பயிற்சி மேற்கொண்ட ரட்சன், தந்தை வழிகாட்டலில் உலகத்தில் யாரும் செய்யாத சாதனையாக இரண்டு கைகளை பின்புறம் கட்டிக் கொண்டு நீச்சல் குளத்தில் 28 மீட்டர் தூரத்தை குறுகிய நேரத்தில் கடக்க போவதாக ரட்சனின் தந்தை லிங்கன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்சில் தெரிவித்துள்ளார்.
இதனையேற்றுக்கொண்ட “லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை நிமிடமாக
3 நிமிடம் 17 நொடி என முடிவு செய்தது. 30/06/2024 -அன்று சாதனை படைக்க முடிவு செய்யப்பட்டு பொதுமக்கள் முன்னிலையிலும் சிறுவர், சிறுமியர் உற்சாகப் படுத்தியதிலும் சிறுவன் ரட்சன் சாதனையை வெற்றிகரமாக முடித்ததுடன் உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் 1நிமிடம் 99 நொடிகளில் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்று தந்தையின் கனவை மட்டுமின்றி இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப், நிகழ்வில் கலந்து கொண்டு உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை ரட்சனுக்கு வழங்கினார். தலைமை விருந்தினர்களாக படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர், மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் கே.ஏ. எஸ்.சுதாகர், குடியிருப்பு பிரிவு தலைவர் கிருஷ்ண குமார் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகி இலக்கியா மற்றும் அரவிந்த் ஆகியோர் விழாவை ஒருங்கிணைப்பு செய்தனர்.
பிரீத்தி எஸ்.