செங்கல்பட்டு மாவட்டத்தின் படூர் ஏரி உடைப்பால் பொதுமக்கள் துயருக்கு ஆளாகியுள்ளனர். ஊராட்சிமன்றத் தலைவர் தாரா சுதாகர், ஒன்றிய பெருந்தலைவர் எல்.இதயவர்மன் ஆகியோரின் வேகமான நடவடிக்கையால் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கையை மக்கள் பெற்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட படூர் ஊராட்சியில் அமைந்துள்ள படூர் ஏரி, கனமழையால் உடைந்ததால் படூர் ஊராட்சி பகுதி மக்கள் துயருக்கு ஆளாகினர். திடீரென இப்படி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் திருப்போரூர் முதல் படூர் வரை சாலை துண்டிக்கப் பட்டதால் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர்.
படூர் ஊராட்சிமன்றத் தலைவர் தாரா சுதாகர், அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அப்பகுதியில் இருக்கும் தண்ணீர் வெளியேறவும், இன்னபிற தேவைகளுக்குமான உடனடி ஏற்பாடுகளை செய்தார். படூர் பகுதியில்
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மழைநீர் வடியாததால் ஊராட்சி மன்றத் தலைவரான தாராசுதாகர் ஏற்பாட்டில் ஒன்றிய பெருந்தலைவரும் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான எல்.இதயவர்மன் தலைமையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உணவு, அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுப்ரீம் சிறப்பு மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்ததோடு, அப்பகுதி ஊராட்சி பள்ளி முகாமில் பருவமழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டது.
கே.ஏ.எஸ்.சுதாகர், வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் ஏ.ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்தினர் ஆகியோருடன் காவல் துறையினரும் இணைந்து மக்கள் நலப்பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பிரீத்தி எஸ்