செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் ஊராட்சியில்
ஊராட்சி மன்றத்தலைவர் ஆறுமுகம், பாதிக்கப்பட்ட
வடஇந்திய தொழிலாளர்களின்
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தத்தளித்த அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டார்.
ஏபிஜே.அப்துல் கலாம் திருமண மண்டபத்தில் அவர்களை தங்க வைத்து காலை, மதியம், இரவு உணவுகளுக்கு ஏற்பாடு செய்ததோடு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
😍
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் தையூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கன்மால் பகுதியில்
அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். ராகுல்நாத் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மழை- புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவரும் திருப்போரூர் (வ) ஒன்றிய திமுக செயலாளருமான எல்.இதயவர்மன்,
,திருப்போரூர் (வ) ஒன்றிய துணை செயலாளர் ஏ.ரமேஷ், தொகுதி ஐ.டி.விங்க் ஒருங்கிணைப்பாளர் செ.எல்லப்பன், கேளம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராணிஎல்லப்பன் பங்கேற்றனர்.
திருப்போரூர் ஒன்றியம் தையூர் ஊராட்சி கோமான்நகர் பகுதி விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியதை அடுத்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்
இதனையடுத்து திருப்போரூர் ஒன்றிய திமுக செயலாளர் எல். இதயவர்மன், படகில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதோடு மழைநீர் வெளியேறுவதற்கான பணிகளை மேற்கொண்டார்.
திருப்போரூர் (வ) ஒன்றிய திமுக துணை செயலாளர் ஏ.ரமேஷ், (வ) ஒன்றிய பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஒன்றிய ஐ.டி.விங்க் ஒருங்கிணைப்பாளர் ம.ஜெகன், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர், எல்.தயாளன், கிளைச் செயலாளர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பிரீத்தி எஸ்.