மைசூர் ‘தசரா’ கொண்டாட்டம், மைசூர் அரண்மனையில் நடந்தது. அப்போது நடந்த பீரங்கி பயிற்சியின் போது சிலர் தீக்காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு வாய்ந்த மைசூர் தசரா விழா குறித்து சொல்லப்படும் தகவல்கள் குறித்து பார்ப்போம்.
தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக வடிவம் கொண்டு மகிஷனை சம்ஹாரம் செய்த இடமே மகிஷாபுரம், மஹிஷா மண்டலம், மஹிஷுர் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு பின்னர் மைசூர் என்று மருவி இடமாகும்.
மகிஷ வதம் நடைபெற்ற இந்த இடத்திலேயே நவராத்திரி விழா 407 ஆண்டுகளாக நடைபெறுவது இதன் சிறப்பாகும். உலகப் பிரசித்தி பெற்ற ‘தசரா விழா’ முன்னேற்பாடாக, மைசூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற பீரங்கி பயிற்சியின்போதுதான் (காண்க : வீடியோ) சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தசரா விழாவின் முதல்நாள், மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார். பின்னர் புகழ் பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும். பெருந்திரளான மக்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை கண்டு களிப்பார்கள்.
பொன்.கோ.முத்து