செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூர் ஒன்றியம் தையூர் ஊராட்சியின் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. தையூர் −ஜோதிநகர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் நந்தினி- நரேஷ்குமார் தலைமை தாங்கினார். மதுராந்தகம் அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் பங்கேற்றார்.
பழமையான இந்தக் கோயிலை புனரமைத்து ஊர் பெரியோர்கள் ஒன்றுகூடி மிகப் பெரிய ஆலயமாக கட்டிக் கொடுத்துள்ளனர். பரிவார மூர்த்திகள் பரிவார தேவதைகள் மற்றும் ஸ்ரீ கங்கை அம்மன் மூலவர்க்கு புதிதாக சிலைகள் நிர்மாணிக்கப் பட்டன. மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மற்றும் கோ பூஜை என பல்வேறு வேள்விகள், பூஜைகள் நடைபெற்றன.
இரண்டாம் கால- யாக பூஜையானது, மங்கள வாத்தியத்துடன் செண்டை மேளம் முழங்க; யாகசாலையிலிருந்து கலசத்திலுள்ள புனிதநீரை சிவாச்சாரியார்கள்; கோவில் விமானத்திற்கும், மூலவ அம்பாளுக்கும் தெளித்து மகா கும்பாபிஷேகத்தை சிறப்புடன் நடத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில், திருப்போரூர் அதிமுக ஒன்றிய (வ) செயலாளர் மற்றும் தையூர் ஊராட்சி மன்றதலைவர் தையூர் எஸ். குமரவேல், தையூர் காயார் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தனலட்சுமி கோவிந்தன், கேளம்பாக்கம் ஜோதி நகர் சமூகசேவகர் கே.ஏ.டி.அன்பு, வார்டு உறுப்பினர்கள் (ம) பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பிரீத்தி எஸ்.