விநாயகர் சதுர்த்ததி விழா, நாடு முழுவதும் செப்டம்பர் 18- ஆம் தேதி கொண்டாடப் படவுள்ளது. அதன் தொடர் நிகழ்வாக கொண்டாட்ட நாயகரான விநாயகர் உருவச்சிலை வடிவமைக்கும் பணி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்து வருகிறது.
விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் அதன் வடிவமைப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, தண்ணீரில் கரையும் வகையில் மரவள்ளிக்கிழங்கு மாவு, களிமண், காகிதக்கூழ் ஆகியவற்றின் கலவை மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைக்கும் பொழுது சிலைகளில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகும் என்கின்றனர்; அதன் வடிவமைப்பாளர்கள்.
3 அடி முதல் 15 உயரம் வரை உருவாக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகள், ரூ. 3 ஆயிரம் முதல் அதன் தரத்திற்கு ஏற்ப ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது, இந்த ஆண்டின் புதிய வரவாக நந்தி எனப்படும் காளை மாட்டின் மீது விநாயகர் அமர்ந்து இருப்பது போன்றும், மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் விநாயகர் பெருமான் அருள் பாவிப்பது உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கண்ணைக் கவரும் வகையில் மிக நேர்த்தியாக சிலைகள் வடிவமைக்கப் பட்டுள்ளது, வாடிக்கையாளர்கள் பலர் முன்பணம் கொடுத்தும், தாங்கள் விரும்பும் வடிவத்தில் விநாயகரை உருவாக்கி தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
(வீடியோவாக)
பொன்.கோ.முத்து