‘அதாலத்’ மூலம் மறுவாழ்வு பெறும் சிறைவாசிகள் !

சென்னை புழல், மத்திய சிறை-2 ல் சிறையினுள் சிறைவாசிகளின்
எண்ணிக்கையை குறைத்திடும் பொருட்டு சிறைவாசிகளுக்கு ‘சிறை – அதாலத்’ நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு கௌரவ செயல்-தலைவர் எஸ். வைத்தியநாதன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்னிலையில் இன்று (26.08.2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமத் பங்கேற்றார்.

திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் / முதன்மை அமர்வு நீதிபதி எஸ். செல்வ சுந்தரி, காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் / முதன்மை அமர்வு நீதிபதி ஜெ.மாவிஸ் தீபிகா சுந்தரவதனா அவர்களும், சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆர். தமிழ் செல்வி மற்றும் நீதிபதி. சுதா மற்றும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை முதன்மை நடுவர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நீதிமன்ற நடுவர்கள் கலந்துகொண்டார்கள்.

சிறை – அதாலத் மூலம் பிணையில் செல்ல இயலாமல் சிறையில் இருக்கும் சிறுவழக்குகளில் ஈடுபட்ட சிறைவாசியின் வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு சிறையில் இருந்த நாட்களை தண்டனை காலமாக கருதி விடுதலை செய்யப்படுவார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) அமரேஷ் புஜாரி, சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன், சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், (மத்தியசிறை-1) மற்றும் இரா.கிருஷ்ணராஜ் (மத்திய சிறை-2) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் 202 சிறைவாசிகள் விசாரணைக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர்.

நபாசே

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *