சமூகநீதியும் இடஒதுக்கீடும்!இன்று சேலம் கருத்தரங்கம்…

உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் இயற்கை நீதி (natural justice) மற்றும் சமூகநீதி (social justice) ஆகிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக, பதவி உயர்வில் சமூகநீதியின் அடிப்படையிலான 200 புள்ளி ரோஸ்டர் (Roster) முறையை ரத்து செய்துள்ளது. இதன் விளைவாக வழக்கு தொடங்கப்பட்ட 2003 ஆம் ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க புதிய பட்டியல் தயார் செய்யப் படுகிறது. இதன் விளைவாக ஏற்கனவே ரோஸ்டர் முறைப்படி பதவி உயர்வு பெற்றவர்கள் கீழ் நிலைக்கு இறக்கப்படும் நிலை உருவானதுடன், கல்வி மறுக்கப்பட்டும், சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டும், கல்வி மற்றும் சமூக பின்தங்கலால் பெரும் பாதிப்பிற்குள்ளான சமூகங்களைச் சார்ந்தவர்கள் உரிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பே இல்லாமல் ஓய்வு பெறும் சூழல் உருவாகியுள்ளது. இது நவீன ஒடுக்குமுறை. தமிழ்நாடு அரசு உரிய சட்டத்தை இயற்றுவதின் மூலம் சமூகநீதியை நிலைநாட்ட முடியும். பதவி உயர்வில் சமூகநீதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதே இன்றைய (23.7.2023) சேலம் கருத்தரங்கின் நோக்கம். தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
சமூகநீதியின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு காப்பாற்றப்பட வேண்டும். இன்று பதவி உயர்வில் சமூகநீதி மறுக்கப்பட்டால், நாளை பணி நியமனத்தில், அதை தொடர்ந்து, உயர்கல்வியில் என்று ஒவ்வொரு நிலையிலும் இட ஒதுக்கீடு மறுக்கப்படும். இட ஒதுக்கீடு பிரிவில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சமூகத்தின் பெரும் சிக்கலை உணர்ந்து மக்களிடம் உரையாடல் நிகழ்த்த ஊடகம் பெரும் பங்கு ஆற்ற முடியும்.

அத்தகைய புரிதலோடு இன்று (ஞாயிறு) வார விடுமுறை நாள் என்பதையெல்லாம் கடந்து ஊடக நண்பர்கள் சேலம் கருத்தரங்கில் பங்கேற்க தோழமையுடன் அழைக்கின்றோம்.

தமிழ்நாடு அரசு SC/ST அலுவலர் நலச் சங்கம் நடத்தும் அரசு பணிகளில் அரசமைப்புச் சட்டம் தந்துள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க சட்டம் இயற்ற வலியுறுத்தியே இந்த கருத்தரங்கம்.


இடமும் நேரமும் :

தென்றல் திருமண மண்டபம், சண்முகா நகர், தாதகாப்பட்டி, சேலம் -6. நாள்: 23.07.2023 . நேரம்: காலை 10 மணி.

தங்கள் அன்பை நாடும் : பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு. செயலர்- தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *