திருவள்ளூர் மாவட்டம் சிறுலபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, அண்ணாமலை சேரி கிராமத்தில் குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி வாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோல், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்காமல், அதற்கான பணிகள் நடைபெற்றதாக ஊராட்சி மன்ற தலைவி உஷா கணேசன் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை, பாதிக்கப்பட்டோர் தரப்பு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலை இருந்ததால், அது மக்களின் பெருங்கோபமாக இன்று வெடித்தே விட்டது. மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை இதன் தொடர்ச்சியாக முற்றுகையிட்ட பொதுமக்கள், ஊராட்சி மன்றதலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வலியுறுத்தியும்; போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி, கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
P.K.M.