திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான மர கிடங்கு உள்ளது. இங்கு புதிய கட்டிட உபயோகத்திற்கான மரங்கள் மற்றும் ஆயத்த மரப்பலகைகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் அதன் அருகில் இருந்த மின் கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக கிடங்கின் மின் இணைப்பு மீது, தீ பற்றியதில் கிடங்கின் மேல் தரத்தில் இருந்த மரப்பலகைகள் மீது விழுந்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. கீழ்தளத்திலும் காற்றின் வேகத்தால் தீ பரவியது. தகவல் அறிந்து இரண்டு வாகனங்களில் நிகழ்விடத்திற்கு வந்த தீ அணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாததால் அதன் ஜன்னல் வழியாக ரசாயனம் கலந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரப் பொருட்கள் தீயில் கருகி நாசமானதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
PKM