நிழல் கிரகங்கள் என்ன செய்யும்?

(பரிகாரம் –தொடர் பதிவு – 4)

கிரகங்களின் உச்சம்-நீச்சம் – பாதிப்பு
நவகிரகங்களில் ஓவ்வொரு கிரகத்திற்கும் உரிய பொருட்களை கண்டு பிடித்து உலோகம், சமித்து, நிறம், வஸ்திரம் என நம் முன்னோர்கள் பட்டியலிட்டு உள்ளனர். இவை எல்லாமே அந்த குறிப்பிட்ட கிரகங்களின் புற ஊதாக்கதிர்களை இழுக்கும் சக்தி கொண்டவை என்றும் கூறப்பட்டுள்ளது. ஒருவரது ஜாதகத்தில் சாயா (நிழல்) கிரகங்களான ராகு-கேது உள்பட 9 கிரகங்களும் குறிப்பிட்ட ராசியில் அதாவது குறிப்பிட்ட பாகையில் இருக்கும். இந்த ஜாதக கட்டம் வான் மண்டலத்தில் கிரகங்கள் இருக்கும், அதே பாகை கலையை பிரதிபலிக்கக் கூடியவை. உதாரணமாக குரு கிரகத்தை எடுத்துக் கொள்வோம். இந்த கிரகம் கடக ராசியில், அதாவது வான் மண்டலத்தில்; 90 பாகை முதல் 120 பாகை வரை உள்ள பாகை கலைகளில் சஞ்சாரம் செய்யும்போது; உச்சம் பெறுகிறது என்றும்; மகர ராசியான 270 முதல் 300 பாகைக்குள் சஞ்சாரம் செய்யும் போது நீச்சம் பெறுகிறது என்றும் கூறப்படுகிறது. அதாவது உச்சம் என்றால் அந்த பாகை கலையில் அந்த குரு கிரகம் வரும்போது அதில் இருந்து வெளிப்படும் புறஊதாக்கதிர்களின் தாக்கம் உயிரினங்களுக்கு, குறிப்பாக மனிதர்களுக்கு நற்பலன்களை தரும் என்றும்; நீச்சம் என்றால் அந்த பாகை கலையில் அந்த குரு கிரகம் வரும்போது; அதில் இருந்து வெளிப்படும் புறஊதாக்கதிர்களின் தாக்கம் உயிரினங்களுக்கு- குறிப்பாக; மனிதர்களுக்கு நற்பலன்களை தராமல் அதற்கு மாறாக; எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கிரகம் நீச்சம் அடையும்போது அதில் இருந்து வெளிப்படும் புற ஊதாகதிர்கள்; முழுவதும் வேறு ஆங்கிளில் சிதறி விடுகிறது. இதனால் அந்த கதிர்கள் தாக்கம் நமக்கு எதிர்மறை பலனை தருகிறது. ஒரு ஜாதகத்தில் குரு நீச்சத்தில் இருக்கிறார் என்றால், அந்த ஜாதகருக்கு அந்த குரு பகவானால் நற்பலன்கள் ஏற்படாது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அப்போது குரு வின் காரகத்துவங்கள் எனப்படும், கல்வி, செல்வம், புத்திரர்கள் போன்ற விஷயங்களில் பாதிப்பு உண்டாகும் என்று பலன் கூறப்பட்டுள்ளது.
இந்த பாதிப்புகளை சரி செய்வதற்கு அந்த குருவிற்கு உரிய பரிகாரங்களை செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. அதாவது குருவின் பரிகார ஸ்தலம் எனப்படும் ஆலங்குடிக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் எனப்படுகிறது. ஆலங்குடி குரு பகவான் கோவில், வான் மண்டலத்தில் உள்ள குரு கிரகத்தில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களை ரிசீவ் செய்து நமக்கு வழங்கும் இடமாக உள்ளது. அது தவிர குரு பகவான் சிலை எந்த கோயில்களில் இருக்கிறதோ அந்த சிலை குரு கிரகத்தில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களை ரிசீவ் செய்யும் தன்மை பெற்றதாகவும் இருக்கிறது. நாம் ஏற்றும் நெய் தீபம், அதிலிருந்து வெளிப்படும் புகை; அந்த புற ஊதாக்கதிர்களை இழுத்து நாம் சுவாசிக்கும்போது மூச்சுகாற்றுடன் நமது உள்ளே சென்று; உடலில் குருவின் புறஊதாக்கதிர்களின் பற்றாக்குறையை போக்குகிறது என்றும் கூறப்படுகிறது.
இது குருவிற்கு மட்டுமல்ல, எல்லா கிரகத்திற்கும் இதேபோன்றுதான். சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றும் போதும், எலுமிச்சை தீபம், பூசணிக்காய் தீபம் போன்று தெய்வ சன்னதிகளில் ஏற்றும் பரிகார தீபங்களில் இருந்து வெளிப்படும் புகை; அந்த அந்த கிரகத்தில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களை; ரிசீவ் செய்யும் தன்மை பெற்றதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தான் பரிகாரம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கோயில் கோபுரங்களில் உள்ள செப்பு கலசங்கள் இடிமின்னல் ஏற்படும்போது இடிதாங்கியாக செயல்படுகிறது. அந்த கோபுரத்தின் உள்ளே இருக்கும் வரகு தானியம், இடி மின்னலில் இருந்து வெளிப்படும் மின்சக்தியை தாங்கும் ஒன்றாக உள்ளது. அவற்றின் சார்ஜ் செய்யும் சக்தியை புதுப்பிப்பதற்காகத்தான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. பண்டைய காலங்களில் இயற்கை சீற்றம் ஏற்படும்போது மக்கள் அருகில் உள்ள கோயில்களில் தஞ்சம் அடைந்ததாக தெரிகிறது. அதற்கு காரணம் அந்த கோபுரங்கள் இடிதாங்கியைபோல் செயல்படும் தன்மை உள்ளதாக கூறப்படுவதுதான். பரிகராங்கள் மூட நம்பிக்கை என்று கூறினாலும், அதனால் பலன் கிடைக்கிறது என அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இதை அறிவியல் பூர்வமாக நிருபிக்கவும் தற்போது ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

(மீதி அடுத்த பதிவில்)

கட்டுரையாளர்: ஜோதிட ரத்னா, பஞ்சாங்க கணிதமணி, பூம்புகார் ஜி. ஸ்ரீனிவாசன் M.A (Astrology) தொடர்புக்கு: வாட்சப் எண்: 9499902400 – கைபேசி > 9080082200-

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *