இந்திய சாதனை முறியடிப்பு ! 100மணிநேரம் சமைத்த நைஜீரிய பெண்

நைஜீரியாவை சேர்ந்தவர் ஹில்டா பாசி (27). பெண் சமையல் நிபுணர். தொழிலதிபர். தொடர்ச்சியாக 100 மணி நேரம் சமைத்து சாதனை படைக்க ஹில்டா பாசி முடிவு செய்தார்.
அதன்படி அவர் கடந்த 11.05.2023 – அன்று மாலை 4 மணிக்கு சமைக்க தொடங்கினார். நைஜீரிய உணவுகளான ஜோலோப் ரைஸ், அகாரா போன்ற நைஜீரிய உணவு
வகைகளை அப்போது அதிக அளவில் தயாரித்தார். கொஞ்சம் வெளிநாட்டு
உணவு வகைகளையும் சமைத்தார். லாகோஸ் நகரில் நடந்த இந்த சாதனை நிகழ்ச்சியில் சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை உற்சாகப்படுத்தியபடி இருந்தனர்.
ஹில்டா பாசி தொடர்ந்து 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்தார். மொத்தம் 110 உணவு வகைகளை சமைத்தார். இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த பெண் சமையல் நிபுணர் லதா டாண்டன் 2019-ம் ஆண்டு தொடர்ந்து 87 மணி நேரம் 45 நிமிடங்கள் சமைத்து இருந்தார். அந்த சாதனையை ஹில்டா பாசி முறியடித்தார். இதையடுத்து அவருக்கு ஜனாதிபதி முகம்மது புகாரி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து ஹில்டா பாசி கூறும் போது, ”மக்களின் அன்பின் வெளிப்பாடு மிகவும் வியப்பாக இருக்கிறது. அன்புக்கும், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி” என்றார். ஹில்டா பாசியின் சாதனை சமையல் நிகழ்ச்சி, யூடியூப் மற்றும்
இன்ஸ்டாகிராமில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதை லட்சக் கணக்கான மக்கள் பார்த்தனர். கின்னஸ் சாதனை நிறுவனம்
கூறும் போது, ”ஹில்டா பாசியின் அற்புதமான முயற்சியை நாங்கள் அறிவோம். அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த அனைத்து வித
ஆதாரங்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்து உள்ளது.

பாரதி

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *