தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அந்திரியா அதிசயம். தொழிலதிபர்.
தனது தோட்டத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில்,
செல்லாண்டியம்மன் கோயில் அருகே வெள்ளை நிற காரில் வந்த சிலர் அந்திரியா அதிசயத்தை கடத்திச் சென்றனர்.
இதனை பார்த்த கிராம மக்கள் சிலர் அவரது மருமகன் ஆனந்தனிடம்,
‘உங்கள் மாமாவை வெள்ளை நிற காரில் சிலர் கடத்திச் செல்கின்றனர்’ என தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனந்தன் உடனடியாக ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி. டோங்ரே உமேஷ் வழிகாட்டலில் ஒட்டுமொத்த போலீசாரும் அலர்ட் ஆகினர்.
லட்சுமிபுரம் நீதிமன்றத்தில் பணி நிமித்தமாக வந்து பணி முடித்து திரும்பிய உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சிலைமணிக்கு, அது அவரது எல்லைக்கு உட்பட்ட பகுதி இல்லை என்றாலும் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யின் அனுமதியைப் பெற்று, களத்தில் இறங்கினார்.
போலீஸ் ஜீப் டிரைவர் உதவியுடன் நீதிமன்றத்தில் இருந்து வைகை அணைப்பகுதியை நோக்கி ஜீப்பில் விரைந்தார்.
வைகை அணைப் பகுதியை ஒட்டிய சின்னக்காமக்கன்பட்டி எனும் இடத்தில் கடத்தல் நபர்கள் தாறுமாறாக ஓட்டி வந்த வெள்ளை நிற டி.என். 64-பி-8114 என்ற டவேரா வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது போலீஸ் டீம்.
கடத்தலுக்கு உடந்தையாகவும் தேனி போலீசாருக்கு போக்கு காட்டியும் வந்த கடத்தல் காரின் டிரைவரும் குற்றவாளியுமான மதுரை சாக்கிலிப்பட்டியைச் சேர்ந்த தா்மராஜ் என்பவரின் மகன் பிரபு சிக்கினார்.
டுவிஸ்ட்டுக்குள் டுவிஸ்ட் என்பது போல இன்னொரு பக்கம் தர்மராஜ் மகன் பிரபுவை சற்றேர முப்பது கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் விரட்டிக் கொண்டு வந்திருக்கிறார் ஆண்டிபட்டி போலீஸ் எஸ். ஐ.சுல்தான் பாஷா.
கொண்டமநாயக்கன்பட்டி
செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த சப் – இன்ஸ்பெக்டர் சுல்தான் பாஷா, செக்போஸ்டில் நிறுத்தாமல் வந்த காரை விரட்டிய பின்னர்தான் அது கடத்தல் கார் என தெரியவந்தது. அதன் பின்னரே ரமேஷ் மொத்தமாக போலீஸ் வளையத்தில் சிக்கிக் கொண்டார்
‘அடுத்தவங்க லிமிட், அதை அவங்க பாத்துப்பாங்க’ என்று லா -பாய்ண்ட் அள்ளிவிடாமல், ‘ரெடி ஜூட், விடாதீங்க’ என்று நாற்புறமும் பாய்ந்த மொத்த போலீஸ் டீமுக்கும் பர்மிசன் வழங்கிய தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி.யை பாராட்டுவதில் மனநிறைவே !
#நபாசேதுராமன்