சட்டை கிழியாம உட்கட்சி தேர்தலா?

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடந்த திமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலின் போது முதலில் கைகலப்பும் பின்னர் சட்டை கிழிப்புமாக தேர்தல் முடிந்துள்ளது.

திமுகவின் 15-ஆவது அமைப்புத் தேர்தலை, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக எதிர்கொண்டது. பத்து ஒன்றிய நிர்வாகிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல், மாவட்டத்தின் குன்றத்தூரில் திருமண மண்டபத்தில் நடந்தது. அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் தேர்தலுக்கு தலைமை தாங்கினார். குன்றத்தூர், காட்டாங்கொளத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட 10 ஒன்றிய நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருப்போரூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ரோஸ் நாகராஜன் ஒன்றிய செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப் போன போதுதான் விவகாரம் வெடித்துள்ளது. திடீரென ரோஸ் நாகராஜன் தாக்கப் பட்டார். திருப்போரூர் ஒன்றியத்தின் தற்போதைய செயலாளர் இதயவர்மனோடு இருக்கும் நிர்வாகிகள்தான் அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்படியொரு குற்றச்சாட்டை முன் வைப்பது ரோஸ் நாகராஜன் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, ரோஸ் நாகராஜனும்தான்.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ரோஸ்நாகராஜனை அங்கிருந்து காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர். சட்டை கிழிந்த நிலையில், ரத்த காயத்துடன் அங்கிருந்து புறப்பட்ட ரோஸ் நாகராஜன் குன்றத்தூர் போலீசில் தாக்குதல் குறித்து புகார் அளித்தார். தாம்பரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. எஸ். ஆர்.ராஜா, சட்டை கிழிந்த ரோஸ் நாகராஜனுக்கு தன்னுடைய காரில் வைத்திருந்த புது சட்டையை கொடுத்து போட்டுக் கொள்ளும்படி சொன்னார். எம்எல்ஏவின் சட்டையோடு மீண்டும் போய் ரோஸ் நாகராஜன் மனுத்தாக்கல் செய்யக்கூடும் என்று கருதப்பட்டதால் மீண்டும் அங்கே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதையடுத்து மனுதாக்கல் நடந்து கொண்டிருந்த திருமண மண்டப நுழைவாயில் சில மணித்துளிகள் பூட்டப்பட்டது. அதன்பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது.

குன்றத்தூர் போலீசில் புகாரைக் கொடுத்து விட்டு அறிவாலயத்திலும் ஆதரவாளர் குழாமோடு போய் புகாரை கொடுத்துள்ளார் ரோஸ் நாகராஜன். தொகுப்பு – ஜி. எஸ்.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *