‘சார்… நாங்க எலக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட்… எங்களை அடிஷனலா சிவில் ஏரியாவும் சேர்த்துப் பாக்கச் சொல்றாங்க!’- இப்படியான குமுறல் முணுமுணுப்பு சென்னை மாநகராட்சி ஏரியாவில் கேட்கிறது. குறிப்பாய்ச் சொல்வதென்றால் -1,3,6,10 மற்றும் 11 ஆகிய மண்டலங்களைச் சொல்லலாம்.
எலக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட் அதிகாரி (ஏ.இ) க்கு சிவில் ஏரியாவிலும், சிவில் டிபார்ட்மெண்ட் அதிகாரி (ஏ.இ.)க்கு எலக்ட்ரிகல் ஏரியாவிலும் கூடுதல் பணியை ஒப்படைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்பே இல்லாத ஏரியாவில் பணியாற்றுவது குறித்துதான் இப்போது பிரச்சினையே ! எலக்ட்ரிகல் ஏரியா ஏ.இ.க்கள் அடிஷனலாக சிவில் பணியையும் சேர்த்து கவனிக்க வாய்வழி உத்தரவு என்கிறார்கள்.
பெருவெள்ளம், வீடுகள், சாலை போன்ற பல பிரிவுகள் சிவில் ஏரியாவுக்கானது. எலக்ட்ரிகல் (மின்துறை) பிரிவு என்பது அடிப்படையிலேயே வேறு! சிவில் ஏ.இ. வேறு. எலக்ட்ரிகல் ஏ.இ.வேறு. எண்ணெய்யும் தண்ணீரும் போல. இரண்டையும் ஒட்ட வைக்கும் முயற்சி அல்லது சூழ்நிலையின் பின்னணியை யோசித்தால், சிவில் ஏ.இ. பற்றாக்குறை இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. சென்னை பெருநகர மேயர் பிரியாராஜன் அவர்கள், சிறு முணுமுணுப்பும் கேட்காவண்ணம் பிரச்சினையின் மீது கவனம் செலுத்தவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு … ந.பா.சேதுராமன்