சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக ஏழு நாட்கள் தொடர் சோதனையில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 41 நபர்கள் கைது செய்யப்பட்டு 577 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் 2.8 கிலோ மாவா, பணம் ரூ.1,70,270-, மூன்று கார்கள், ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை (DABToP -Drive Agalnst Banned Tobacoo Products) மூலம் சிறப்பு சோதனைகள் கூடுதல் கமிஷனர்கள் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆலோசனையின் பேரில், உதவி கமிஷனர்கள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், தனிப்படை போலீசார் குழுவால் நடத்தப் பட்டது. சென்னை ராஜமங்கலம், தாதங்குப்பம் அருகே 3 கார்கள் மற்றும் ஒரு டூ வீலரில் வந்த ஆட்கள் மடக்கி விசாரிக்கப் பட்டனர். அப்போது காரில் குட்கா புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவே போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். தூத்துக்குடி – கோவில்பட்டியைச் சேர்ந்த முருகன், காஞ்சிபுரம்- குன்றத்தூர் கார்த்திக் மற்றும் படப்பை மாரிசெல்வம், அந்தோணி பாஸ்கர், குன்றத்தூர் மீனாகுமார், சுகுமார் ஆகிய நபர்களை விசாரணைக்குப் பின் போலீசார் கைது செய்தனர்.
போலீஸ்கமிஷனர் சங்கர்ஜிவால்
பிடிபட்ட நபர்களிடமிருந்து 527 கிலோ ஹான்ஸ், கூலிப், ரெமோ, விமல் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், பணம் ரூ.1.70,000/-, 3 கார்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் அண்ணாநகர், 3வது அவென்யூவில் குட்கா விற்பனை செய்ததாக சென்னை அமைந்தகரை கேசவன் என்பவரை போலீசார் கைது செய்தனர், அவரிடமிருந்து 18.420 கிராம் குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்து,
ராஜமங்கலம் போலீசாரின் பிடியில் சிக்கிய தூத்துக்குடி மாவட்டம் உமரிக் கோட்டையைச் சேர்ந்த பாலகருப்பசாமி யிடமிருந்து 18.9 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டினார். விகடகவி எஸ். கந்தசாமி