50 டன் கடத்தல் அரிசி மீட்பு… வட்டாட்சியர் ரஜினிகாந்த் நடவடிக்கை !

50 டன் கடத்தல் அரிசி மீட்பு… வட்டாட்சியர் ரஜினிகாந்த் நடவடிக்கை ! கடத்துவதற்காக கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 50 டன் ரேஷன் அரிசியை வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையிலான அரசு அதிகாரிகள் தடுத்து பறிமுதல் செய்தனர்.

சென்னையை அடுத்த செங்குன்றம் – அலமாதி பகுதியில் கிடங்கு ஒன்றில் ரேஷன் அரிசியை மர்ம நபர்கள் பதுக்கி வைத்துள்ள தகவல், பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் கவனத்துக்கு வரவே, சம்பவ இடத்துக்கு படையுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் இரண்டு டன் ரேஷன் அரிசி மூட்டையை சிக்கியது. அதை அங்கிருந்து கைப்பற்றி தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி பதுக்கல் குறித்து அதிகாரிகள் அளித்த புகாரில், சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசியை பதுக்கி பாலீஷ் செய்து ஆந்திராவிற்கு கடத்துவதை பல காலமாக குறிப்பிட்ட ஒரு கும்பல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

-தேனீஸ்வரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *