Month: July 2023

கந்துவட்டி கொடுமை! வீடியோ வெளியிட்டு தம்பதி தற்கொலை…

கந்துவட்டி கொடுமையால் ஏற்பட்ட பாதிப்பை சமூக வலைதளங்களில் காணொளி காட்சியாக (வீடியோ) வெளியிட்டு, மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தம்பதி, ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து கணவன்- மனைவி உயிரிழந்தனர்…..

N.L.C.விவகாரம்…பாமக போராட்டம்!

என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம், காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவன விரிவாக்கத்திற்காக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி காவல் துறையினரை ஏவிவிட்டு சட்ட….

யாருக்கு சொந்த வீடு அமையும்?

தொடர் பதிவு : 11 (சொந்த வீடு என்ற கனவு நனவாக) ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது கனவாக உள்ளது. சிலர் தனது வாழ்நாளில் அந்த கனவை நிறைவேற்றி விடுகிறார்கள். சிலருக்கு அதுகனவாகவே உள்ளது. வேறு சிலரோ சொந்தவீட்டை கட்டிவிட்டு பின்னர்….

நின்றிருந்த லாரி மீது சிலிண்டர் சுமை லாரி மோதல்!

பழுதாகி சாலையில் நின்ற சரக்குந்து (லோடு லாரி) மீது சமையல் எரிவாயு உருளைகளை (கியாஸ் சிலிண்டர்) ஏற்றி வந்த மற்றொரு சரக்குந்து மோதியதில், நிகழ்விடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி லாரி ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஹெச்.பி., சமையல்….

நேரடியான மின் இணைப்பு ! ஆபத்தில் தொழிலாளிகள்…

திருவள்ளூர் அருகே பாதாள சாக்கடை திட்ட பணிக்காக உயர் அழுத்த மின் கம்பியிலிருந்து கொக்கி மூலம் நேரடியாக மின்சாரம் (திருடி) பயன்படுத்துவதால் கூலித் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையை, அலட்சியத்துடன் அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் குடிநீர்….

அரிசி தட்டுப்பாடு! இதுதான் காரணமா?

தமிழகத்தில் விலைவாசி உயர்வு நாளுக்குநாள் உச்சம்தொட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை உயர்வை தொடர்ந்து, சமையலுக்கு பயன்படுத்தப் படக்கூடிய பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட எல்லா பொருட்களும் விலை அதிகரித்துள்ளது. தற்போது அரிசி, சோளம் போன்ற உணவுப் பொருட்கள், இம்மாதம்….

கோயிலில் மொட்டை போட ஒப்பந்த மோதல்! மந்திரி சேகர்பாபு கார் முற்றுகை…

திருவள்ளூர் மாவட்ட பெரியபாளையம் கோவிலில் பக்தர்களுக்கு மொட்டை அடிக்க ஒப்பந்ததாரர்கள் தடை விதித்ததால், பாதிக்கப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள்; சாமி தரிசனம் செய்ய வந்த அறநிலையத் துறை மந்திரி சேகர்பாபுவின் மகிழுந்தை (கார்) சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர்….

“மனம், அலை பாய்ந்தால் வாழ்க்கை குப்புற தள்ளிவிடும்” -வெ.இறையன்பு

கல்வி கற்கும் போது மனமும் உடலும் ஒரே புள்ளிக்குள் இயங்க வேண்டும், மனம் அலைபாயும்போது ஒரு செயலில் ஈடுபட்டால் வாழ்க்கை நம்மை குப்புறத் தள்ளி குழி பறித்து விடும் என மாணவர்களுக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ. ஏ. எஸ்…..

சமூகநீதியும் இடஒதுக்கீடும்!இன்று சேலம் கருத்தரங்கம்…

உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் இயற்கை நீதி (natural justice) மற்றும் சமூகநீதி (social justice) ஆகிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக, பதவி உயர்வில் சமூகநீதியின் அடிப்படையிலான 200 புள்ளி ரோஸ்டர் (Roster) முறையை ரத்து செய்துள்ளது…..

வயலில் மின்சாரம் பாய்ந்து மாடுகள் பரிதாப சாவு…

வயல்வெளியில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி உள்ளிட்ட ஐந்து மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. திருவள்ளூர் மாவட்டம் கோளூர் கிராமத்தில் கால்நடைகள் அதேபகுதி வயல்வெளி மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது, மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பிகள்….