Day: February 20, 2022

வாக்குப்பதிவில் சரிந்த சென்னை – பின்னணி என்ன?

சென்னையில் வாக்குப்பதிவு ஏன் சரிவு என்ற அலசலை ஊடகங்கள் ஒருபக்கம் செய்து வருகின்றன. அதே வேளையில் “சென்னையன்கள் செத்தே போகலாம்” என்றளவில் சோஷியல் மீடியா நட்புகள் (?!) குதறியெடுத்து எழுதி வருகின்றனர். இந்த வேளையில் நான் பலருக்கு அளித்த பதில் (கமெண்ட்)….

வாக்குபதிவு மந்தம் ஏன்?

காலை பத்துமணியிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டனர்… “சென்னையன்ஸூக்கு ஓட்டுப்போட துப்பில்லே, சென்னையன்சுகளுக்காக மத்திய மாநில அரசும் மாநில அரசும் இம்புட்டு கொட்டிக் கொடுத்தும் என்ன பிரயோஜனம்” னு ஓங்கி அடிச்சுட்ருக்காங்க! மழை அதிகமா அடிச்சாலும் சரி, தேர்தல்ல வாக்குப்பதிவு குறைஞ்சாலும் சரி,….