பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு உறுதி|

மேற்காசியப் போர் எதிரொலியாக இந்தியன்-பாரத் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு, ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவை தொடர்ந்து பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து இருப்பதாக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா என மும்முனையில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக எல்.பி.ஜி., சமையல் எரிவாயு உருளை வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 19 மற்றும் 5 கிலோ எடை கொண்ட, வணிக சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு பயன்பாட்டிற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வீட்டு உபயோக எரிவாயு முன்பதிவு, 25 நாட்கள் முன்னதாக செய்துகொள்ள கெடு விதிக்கப்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக இந்தியாவுக்கு எரிவாயு, கச்சா எண்ணெய்களை கொண்டு வரவேண்டிய கப்பல்கள், ஓம் ஜலசந்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து 70% எரிவாயு, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நிலையில் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதும் உள்ள எரிவாயு, எண்ணெய் நிறுவனங்களில் உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டிலுள்ள இந்தியன் ஆயில் மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள பாரத் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை ஆகியவற்றில் சமையல் எரிவாயு நிரப்பும் பணி முடங்கி உள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆலைகளுக்கு எல்.பி.ஜி., ராட்சத எரிவாயு உருளையை சரக்குந்து மூலமும்; இதேபோன்று சென்னை-திருவள்ளூர்-காஞ்சிபுரம்-திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு வீட்டு சமையல் எரிவாயு உருளைகளை கொண்டு செல்லும் சரக்குந்துகள் வரிசையாக ஆலை வளாகத்திலும்-சாலையிலும் நிற்கின்றன. குறிப்பிட்ட நேரத்தில் முகவர்களுக்கு சென்று அடையாததால் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இல்லத்தரசிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக இந்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு-கச்சா எண்ணெய் ஆகியவற்றை இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டதின் விளைவு இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தொழிற் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாக கூடும் எனவும், இதே நிலை நீடித்தால் எரிவாய்வு போன்று பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும், இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு; போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முன் வர வேண்டும் என; தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோழர்தோழர்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *