திருவள்ளூர் மாவட்டம் பெரவள்ளூர் கிராமத்தில் சிதிலமடைந்து காணப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வைத்தியநாத ஆத்ம லிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி திருக்கோவில் புனரமைக்கப் பட்டது. சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில், ஆலய கும்பாபிஷேகத்திற்கான யாக கலச பூஜைகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்தது. நிறைவு நாளான இன்று (13.03.2022) முக்கிய புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தை கொண்டு கோபுர கலசங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் சிறப்பாக நடத்தினர். கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற திருமந்திரத்தை உச்சரித்தபடி சுவாமியை வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்கார அபிஷேக தீப ஆராதனைகள் நடைபெற்றன. கோவில் நிர்வாகம் சார்பில் விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. -தேனீஸ்வரன் –