பிட்காய்ன் எதிர்காலம் ! முதலீட்டுக்கு 30% வரி கதவை திறந்த இந்தியா…

உலகளவில் பிட்காய்ன் என்ற பெயர் பரவலாக அறியப்பட்டு உள்ள ஒன்று.
கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினில் இந்திய நாட்டவர் அதிகளவில் முதலீடு செய்துள்ளதை ஒவ்வொருநாளும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்நிலையில்தான் மத்திய அரசின் 2022 பட்ஜெட்டில் பிட்காயின் குறித்து(ம்) பேசப்பட்டிருக்கிறது. அப்படிப்பேசியதில் முக்கியமானது பத்து வரிகள்தான் !

”பிட்காயின் முதலீட்டின் மூலம் ஈட்டும் வருமானத்துக்கு இனி 30% வரி விதிக்கப்படும். அதேபோல் இதர கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் ஈட்டும் வருமானத்துக்கும் 30% வரி விதிக்கப்படும். கிரிப்டோகரன்சிகளைப் பரிசாக வழங்கினால் பரிசு வாங்கியவருக்கே வரி விதிக்கப்படும்” – அவ்வளவுதான் மேட்டர்.

’இந்தியாவில் ரிசர்வ் வங்கிமூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும்… பிளாக்செயின் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ள இந்த டிஜிட்டல் கரன்சி, நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும்’ என்ற வார்த்தையும் பட்ஜெட்டில் சொல்லப் பட்டுள்ளது.
பிட்காய்ன் வணிகத்தில் ஈடுபட வேண்டுமென்றால் அரபு நாடுகளுக்கும் அமெரிக்க மண்ணுக்கும்தான் நாம் இடம் பெயர வேண்டுமா என்ற நிலையை, மத்திய அரசின் நான்குவரி அறிவிப்பு அப்படியே புரட்டிப் போட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், பிட்காய்ன் என்ற மில்லியன், பில்லியன் டாலர் சந்தைக்கு மத்திய அரசு வரி விதிப்புடன் கதவை திறந்து விட்டுள்ளதை புரிய முடிகிறது. மத்திய பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பால், பொருளாதாரம் சீரடைய வாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம். அந்நிய முதலீடும் இதன் மூலம் கிடைக்கும், அந்நிய நாட்டுக்கு இந்திய முதலீடு போகாமலும் இதன் மூலம் தடுக்க முடியும் என்பது இதன் சிறப்பு.

பாஜக சார்பில் நடைபெற்ற சுயசார்பு பொருளாதார கருத்தரங்கில் பேசிய இந்திய பிரதமர் திரு. நரேந்திரமோடி, ‘டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக் கொள்ள முடியும்’ என்று குறிப்பிட்டார்.
”டிஜிட்டல் கரன்சி என்பது நமது நாட்டின் ரூபாய் நோட்டு வடிவிலான டிஜிட்டல் வடிவமாக இருக்கும், ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும், டிஜிட்டல் கரன்சியுடன் தற்போதுள்ள கரன்சியை பரிமாற்றம் செய்யும் அமைப்பாகவும் அது இருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார்.
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (சிபிடிசி) டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும், யாரேனும் டிஜிட்டலாக பணம் செலுத்தினால் அதை ரூபாய்த் தாளாக மாற்றிக் கொள்ளமுடியும். டிஜிட்டலாக பணம் செலுத்துவதும் ஆன் லைனில் பணப்பரிமாற்றம் செய்வதும் ஆபத்து இல்லாத ஒரு வழிமுறை. உலகளாவிய டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையை எளிதாக்குவதன் வாயிலாக நிதி – தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்து. பணம் கையாள்வது, அச்சிடுவது, மேலாண்மை (நிர்வாகம்) பார்ப்பது போன்ற அதீத சுமைகள் இதன் மூலம் வெகுவாகக் குறையும்” – என்றிருக்கிறார், பிரதமர்.

ஐநூறு ரூபாயை கையில் வைத்துக் கொண்டும் முதலீடு செய்யலாம், அதையே ஆயிரம் லட்சம் மடங்கு கூட்டியும் முதலீடு செய்யலாம், வணிகப் பரிமாற்றம் செய்யலாம் என்பதால், ‘டிரேடிங்’ உலகுக்கு இனி பொற்காலம்தான்.

பிட்காய்ன், கிரிப்டோகரன்சி போன்ற வார்த்தைகளை அதி ரகசியமாக (?) பயன்படுத்தி வந்த ஆர்வலர்கள் அத்தனைபேருக்கும் இதனால் மகிழ்ச்சிதான் !
பிட்காய்ன் (நாணயக்குறியீடு : பி.டி.சி) என்ற வடிவாக்கம், ஜப்பானைச்சேர்ந்த ’சந்தோஷி நகமோட்டோ’ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப் படுகிறது. 2009-ஆம் ஆண்டில் திறந்த மூலப்பொருள் (ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர்) என்றளவில் அடையாளப்படுத்தப்பட்டது.
இப்போது வரை புழக்கத்தில் 18 லட்சத்து மூன்றாயிரம் பிட்காய்ன்கள் புழக்கத்தில் இருக்கிறது. இதற்கடுத்து காத்திருப்பு பட்டியலில் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் காய்ன்கள் வரிசையில் காத்துக் கிடக்கிறது.
இந்த கையிருப்பும் காத்திருப்பும் உலக வர்த்தக சந்தையில் பெரும் மாற்றத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல !

-சங்கரநாராயணன்

(பிட்காய்ன் குறித்த கருத்துகள் வரவேற்கப்படுகிறது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *