தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக சென்னை
வண்டலூர் கிரசென்ட் கல்லூரியில் தனியார் துறையில் பணியமர்த்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் எதிர்வருகிற ஞாயிறு (20/03/2022) காலை 8.30.மணி முதல் மாலை 3 மணி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகிலுள்ள பி.எஸ். அப்துர் ரகுமான் கிரசன்ட் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில் இந்த முகாம் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. முகாமின் திட்டமும் சிறப்பும் குறித்து சிலவற்றை பார்ப்போம்.
400- க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்.
50 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணைகள்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான பதிவு வழிகாட்டுதல்கள்.
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்.
கலந்து கொள்வதற்கான கல்வித்தகுதிகள்:-எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, மற்றும் பொறியியல்.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் செய்ய வேண்டியது இதுதான்: பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு (பயோடேட்டா) தவறாமல் கொண்டு வரவேண்டும். அடுத்ததாக செய்ய வேண்டியது : முகக் கவசம் (மாஸ்க் அணிதல்) மற்றும் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றுதல். தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புத்துறை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தத் தகவல் வெளியிடப் பட்டுள்ளது!
பிரீத்தீ – எஸ்.