“கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளார் எஸ்.பி.வேலுமணி!” : ரெய்டு முடித்து போலீஸ் தகவல்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.15 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 59 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.84 லட்சம் ரொக்கமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப் பட்டிருப்பதாக தெரிகிறது.
செல்போன்கள், லேப் -டாப்கள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்ட பொருட்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடையதாக சொல்லப்படும் 59 இடங்களில் நடந்த சோதனையும் சோதனையின் போது சிக்கியவை குறித்த விபரங்களையும் போலீசார் (இணைப்பு) வெளியிட்டுள்ளனர். எஸ்.பி.வேலுமணியின் முதலீடுகளில், ‘கிரிப்டோ கரன்சி’ யும் (34 லட்ச ரூபாய் முதலீடு) இருப்பதாக போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சொல்லப் பட்டுள்ளது.

– கோட்டையன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *