சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் தென் சென்னை 181 ஆவது வார்டில் பாலவாக்கம் த.விஸ்வநாதன் வென்றிருக்கிறார். கட்சியில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக உள்ள இவர் முன்னாள் கவுன்சிலருமாவார். இளைஞரணி காலம்தொட்டு கட்சிக்கு பாலமாய் இருக்கிறவர் என்பதால் பந்தயத்தில் விஸ்வநாதன் பெயர் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறது.
எஸ்விஆர் என்று உள்ளூரில் அழைக்கப்படும் எஸ் வி ரவிச்சந்திரன், சோழிங்க நல்லூர் மேற்கு பகுதி செயலாளர். வார்டு 184 -ல் கவுன்சிலராக வெற்றி பெற்றிருக்கிறார்.
189 ஆவது வார்டில் வட்டச் செயலாளர் பள்ளிக்கரணை வீ. பாபு வெற்றி பெற்றிருக்கிறார். தொகுதி எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், மாவட்ட செயலாளர் – அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோரின் அருட் பார்வையில் இருக்கிறவர் பள்ளிக்கரணை வீ.பாபு. பள்ளிக்கரணை பேரூராட்சியாக இருக்கும் போது துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
மண்டலக் குழுத் தலைவர் மகளிர் வசம் போகிறது என்றால் 188 வார்டில் வெற்றி பெற்ற சமீனா செல்வம் பிரகாசமாய் தெரிகிறார். தேர்தலுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி என்கின்ற அனுதாப அலை வெற்றி அலையாக சமீனா செல்வத்துக்கு மாறி இருக்கின்றது.
183 வார்டில் வெற்றி பெற்ற தமிழரசி சோமுவும் பெரிதும் எதிர்பார்க்கப் படும் சேர்மன் பதவிக்கான நபராக தெரிகிறார். திமுகவின் சட்ட திருத்தக்குழு செயலாளர் பாலவாக்கம் க.சோமுவின் மகள் என்பது தமிழரசி சோமுவுக்குகூடுதல் பலம் !
– பிரீத்தி எஸ். –