ஆர்.டி.ஓ. உலகம் !

(புதிய தொடர் – 1)

ஆர்.டி.ஓ. அலுவலகம் எனப்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office, RTO), மோட்டார் வாகனச் சட்டம், 1988- இன் பிரிவு 213 (1)இன் கீழ் அமைக்கப்பட்ட மாநில அரசுகளால், போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகிற அல்லது நிர்வகிக்கப்படுகிற நாட்டின் முக்கிய துறையாகும்.

குடிமக்களுக்கு சேவைகளை அளித்தல், வாகனங்கள் மீதான, அனைத்து வரிகளையும், கட்டணங்களையும் பெற்று அரசின் கருவூலத்துக்குக் கொண்டு சேர்த்தல்,சாலைப் பாதுகாப்பை கூட்டுதல், மேம்படுத்தல் மற்றும் சாலை விபத்தில் பாதிக்கப் பட்டோருக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் அளிக்கின்றன.
ஆர்.டி.ஓ. அலுவலகத்தைப் பொறுத்தவரையில் அதன் மொத்த இயக்கமும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (R.T.O.) கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆர்.டி.ஓ.வுக்கு கீழ்நிலை அதிகாரிகளாக மக்கள் தொடர்பு அலுவலர் (ம) நேர்முக உதவியாளர் என்று அழைக்கப்படும் (P.A.,) அதிகாரி இடம் பெறுகிறார்.
மக்கள் தொடர்பு அலுவலர் (ம) நேர்முக உதவியாளருக்கு அடுத்த நிலையில் கண்காணிப்பாளர் (superintendent) என்ற அதிகாரி இடம் பெறுகிறார்.
கண்காணிப்பாளரு (superintendent) க்கு அடுத்த நிலையில், கிளார்க்- ரெக்கார்டு கிளார்க், டைப்பிஸ்ட், தபால் பிரிவு என முறைப் படுத்தப்படுகிறது.
களப்பணியில் இருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் (Motor vehicle inspector – M.V.I.,), ஆர்.டி.ஓ.வுக்கு அடுத்த நிலை, அதிகாரியாக இருப்பவர் என்பதையும் இங்கே கருத வேண்டும்.

தமிழ் நாட்டின் வட்டார போக்குவரத்து அலுவலக குறியீட்டெண்கள் விபரத்தை முதலில் இப்போது பார்க்கலாம் ! அதன் பின்னர் அடுத்தடுத்த கட்டுரைகளில் “ஆர்டிஓ உலகம்” குறித்து முழுமையாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நன்றி ! – ‘விகடகவி’ எஸ். கந்தசாமி.

த.நா. 01 மத்திய சென்னை (அயனாவரம்) – த.நா. 02 வட மேற்கு சென்னை (அண்ணா நகர்)- த.நா. 03 வட கிழக்கு சென்னை (தண்டையார்பேட்டை) -த.நா. 04 கிழக்கு சென்னை (வள்ளலார் நகர்)- த.நா. 05 வட சென்னை (கொளத்தூர்)
த.நா. 06 தென் கிழக்கு சென்னை (மந்தவெளி)- த.நா. 06 தென் கிழக்கு சென்னை (மந்தவெளி)- த.நா. 07 தென் சென்னை (திருவான்மியூர்)- த.நா. 09 மேற்கு சென்னை (கே கே நகர்)- த.நா. 10 தென்மேற்கு சென்னை (விருகம்பாக்கம்)- த.நா. 11 சென்னை புறநகர் – தெற்கு (தாம்பரம்)- த.நா. 12 சென்னை புறநகர் – வடக்கு (செங்குன்றம்)- த.நா. 13 சென்னை புறநகர் – வடமேற்கு (அம்பத்தூர்)- த.நா. 14 சென்னை புறநகர் – தென்கிழக்கு (சோழிங்கநல்லூர்)- த.நா. 15 உளுந்தூர்பேட்டை/ கள்ளக்குறிச்சி- த.நா. 16 திண்டிவனம்/ செஞ்சி- த.நா. 18 சென்னை புறநகர் – வடக்கு (செங்குன்றம்)- த.நா. 19 செங்கல்பட்டு/ மதுராந்தகம்
த.நா. 20 திருவள்ளூர்- த.நா. 21 காஞ்சிபுரம்/ ஸ்ரீபெரும்புதூர்- த.நா. 22 சென்னை புறநகர் – தென் மத்திய (மீனம்பாக்கம்)- த.நா. 23 வேலூர்/ குடியாத்தம்
த.நா. 24 கிருஷ்ணகிரி- த.நா. 25 திருவண்ணாமலை- த.நா. 27 சேலம் (பயன்பாட்டில் இல்லை)- த.நா. 28 நாமக்கல் (வடக்கு)/ ராசிபுரம்- த.நா. 29 தர்மபுரி, பாலக்கோடு, அரூர்- த.நா. 30 சேலம் (மேற்கு)/ ஓமலூர்- த.நா. 31 கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி- த.நா. 32 விழுப்புரம்
த.நா. 33 ஈரோடு (கிழக்கு)- த.நா. 34 திருச்செங்கோடு- த.நா. 36 கோபிசெட்டிபாளையம்/ சத்தியமங்கலம்/ பவானி- த.நா. 37 கோயமுத்தூர் (தெற்கு)/ சூலூர்- த.நா. 38 கோயமுத்தூர் (வடக்கு)- த.நா. 39 திருப்பூர் (வடக்கு)/ அவினாசி- த.நா. 40 மேட்டுப்பாளையம்/ அன்னூர்- த.நா. 41 பொள்ளாச்சி- த.நா. 42 திருப்பூர் (தெற்கு)/ காங்கேயம்- த.நா. 43 நீலகிரி- த.நா. 45 திருச்சிராப்பள்ளி (மேற்கு)/ மணப்பாறை- த.நா. 46 பெரம்பலூர்- த.நா. 47 கரூர் , அரவக்குறிச்சி, குளித்தலை- த.நா. 48 ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர், லால்குடி- த.நா. 49 தஞ்சாவூர், பட்டுக்கோட்டை- த.நா. 50 திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி- த.நா. 51 நாகப்பட்டினம்- த.நா. 52 சங்ககிரி, மேட்டூர்- த.நா. 54 சேலம் (கிழக்கு)- த.நா. 55 புதுக்கோட்டை, இலுப்பூர், அறந்தாங்கி- த.நா. 56 பெருந்துறை (ஈரோடு) திண்டல்- த.நா. 57 திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வத்தலக்குண்டு, பழனி- த.நா. 58 மதுரை (தெற்கு)/ திருமங்கலம்- த.நா. 59 மதுரை (வடக்கு)/ வாடிப்பட்டி/ மேலூர்- த.நா. 60 தேனி / உத்தமபாளையம்- த.நா. 61 அரியலூர்
த.நா. 63 சிவகங்கை/ காரைக்குடி- த.நா. 64 மதுரை (மத்திய)- த.நா. 65 ராமநாதபுரம்/ பரமகுடி- த.நா. 66 கோயமுத்தூர் (மத்திய)- த.நா. 67 விருதுநகர்/ அருப்புக்கோட்டை- த.நா. 68 கும்பகோணம்- த.நா. 69 தூத்துக்குடி/ திருச்செந்தூர்/ கோவில்பட்டி- த.நா. 70 ஓசூர்- த.நா. 72 திருநெல்வேலி/ வள்ளியூர்- த.நா. 73 ராணிப்பேட்டை/ அரக்கோணம்- த.நா. 74 நாகர்கோயில்- த.நா. 75 மார்த்தாண்டம்

த.நா. 76 தென்காசி/ அம்பாசமுத்திரம்- த.நா. 77 ஆத்தூர்/ வாழப்பாடி- த.நா. 78 தாராபுரம்/ உடுமலைப்பேட்டை- த.நா. 79 சங்கரன்கோவில்- த.நா. 81 திருச்சிராப்பள்ளி (கிழக்கு)/ திருவெறும்பூர்- த.நா. 82 மயிலாடுதுறை/ சீர்காழி
த.நா. 83 வாணியம்பாடி/ திருப்பத்தூர்/ ஆம்பூர்- த.நா. 84 ஸ்ரீவில்லிப்புத்தூர்/ சிவகாசி- த.நா. 85 சென்னை புறநகர் – தென் மேற்கு (குன்றத்தூர்)
த.நா. 86 ஈரோடு (மேற்கு)- த.நா. 87 சிதம்பரம் (பயன்பாட்டிற்கு வரவேண்டியது)
த.நா. 88 நாமக்கல் (தெற்கு)/ பரமத்தி வேலூர்- த.நா. 90 சேலம் தெற்கு- த.நா. 97 ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)- த.நா. 99 கோயமுத்தூர் (மேற்கு)- N/ AN- ஆகிய வரிசைகள், அரசு போக்குவரத்துக் கழக வண்டிகள் ஆகும். அதேபோல் G/ AG/BG/CG-ஆகிய வரிசைகள், அரசுத் துறை பயன்பாட்டு வண்டிகள் ஆகும்.
(தொடரும் : உங்கள் ‘விகடகவி’ எஸ். கந்தசாமி )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *