Madras Kural

தாமிரபரணி லிட்டருக்கு ஒரு பைசா!

தாமிரபரணி நதிநீரை பாதுகாக்க எல்லா காலகட்டத்திலும் யாரோ ஒருவர் பூனைக்கு மணிகட்ட முன்வருகிறார்கள்.

அந்தவகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், தாமிரபரணி பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, இதுகுறித்து விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

தாமிரபரணியில் நீர் எடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து தண்ணீர் வரி பாக்கியை வசூலிக்கக் கோரியே காமராஜ் வழக்கு தொடுத்திருந்தார். தண்ணீர் வரி பாக்கியை வசூலித்து அந்த நிதியைக்கொண்டு தாமிரபரணி பாதுகாப்பு, புனரமைப்புக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் மனுவில் சொல்லியிருந்தார்.

“ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு பைசாவுக்கா விற்றீர்கள், இருபது ஆண்டாக தண்ணீர் விலையை உயர்த்தாதது ஏன், தாமிரபரணியில் இருந்து எத்தனை நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கின்றன?” என்பது உள்ளிட்ட பல கேள்விகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது என்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் பதில் தரவும் அப்போது நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

தாமிரபரணி தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரையிலான
நீளம் சுமார் 125 கிலோமீட்டர். தமிழ்நாட்டில் உற்பத்தியாகி தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கும் நதி, தாமிரபரணி என்ற சிறப்பம்சம் எல்லாமே; நதிநீரை வணிகத்துக்கு கூறு போட்டு விற்றபோதே; செத்தொழிந்து போனது. தமிழின் பழம்பெரும் இலக்கியங்கள், தாமிரபரணி யைப் ‘பொருநை’ எனக் குறிப்பிடுகின்றன.

சேது

Exit mobile version