Madras Kural

வாக்குப்பதிவும்| சில நிகழ்வுகளும்|

நிகழ்வு 1

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியன் வாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். ஐ.டி ஊழியர். இவருக்கும், சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரம்யா என்பவருக்கும் இன்று காலை மீஞ்சூரில் திருமணம் நடைபெற்ற நிலையில் மணமகன் சுபாஷ் மறு வீட்டிற்கு செல்லாமல் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக தனது மனைவி ரம்யா உடன் வந்து தனது சொந்த ஊரான அரியன் வாயல் பகுதி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த அவர், தனது மனைவி ரம்யா வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அவரை கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்றார், இதேபோன்று மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மோனிஷா என்பவருக்கும்- நெய்தவாயல் கிராமத்தைச் சேர்ந்த விஷால் என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்ற நிலையில் மோனிஷா தனது கணவன் விஷாலை அழைத்துச் சென்று நெய்தவாயல் வாக்கு சாவடியில் வாக்களிக்கும்படி செய்தார், பின்னர் தனது மாமியார் வீட்டிற்கு கூட செல்லாமல் மோனிஷா மீஞ்சூரில் உள்ள வாக்கு சாவடிக்கு கணவனுடன் சென்று வாக்களித்தார், ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக மறு வீட்டிற்கு கூட செல்லாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த ஜனநாயக தம்பதிகளுக்கு வாக்காளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


நிகழ்வு 2

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 103 வயதான ஸ்டீபன் என்ற முதியவர், 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ள போதிலும், தன்னலம் கருதாமல் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும், இளைய வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு முதியவர் ஸ்டீபன் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்த அவர், வாக்களிக்காமல் இருப்பதும்- வாக்களிக்க பணம் பெறுவதும் தேச விரோத செயல் என சாடினார். முதியவர் ஸ்டீபன் ஜனநாயகத்தைக் காக்க ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்களிப்பதை தனது வாழ்நாள் கடமையாக கருத வேண்டும் என கேட்டுக்கொண்டார், இதேபோன்று புதுப்பேடு கிராமத்தைச் சேர்ந்த 102 வயதான ஈஸ்வரி என்ற மூதாட்டியும், உடல் தளர்ந்த நிலையில் மனம் தளராமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், என்ற உறுதியோடு, உறவினர்களின் உதவியோடு வாக்கு சாவடிக்கு தானியில் வந்து இறங்கி மூன்று சக்கர நாற்காலி வண்டியில் அமர்ந்து வாக்கு சாவடிக்குள் சென்று தனது விருப்பமான சின்னத்திற்கு வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியோடு ஒவ்வொரு தேர்தலிலும் தனது கணவனுடன் வந்து தான் முதல் ஆளாக வாக்களித்ததை நினைவு கூர்ந்து மலரும் நினைவுகளில் மூழ்கினார் மூதாட்டி ஈஸ்வரி.

நிகழ்வு 3

தமிழகம் முழுவதும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மூர்த்தி, திமுக வேட்பாளர் சுதர்சனம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீர்த்தனா ஆகியோர் அங்குள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியின் 44- ல் தங்களது வாக்கினை பதிவு செய்தனர், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு ஆர்வமாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து. விருப்பமான சின்னத்திற்கு தங்களது வாக்கினை பதிவு செய்தனர், கடந்த ஆறு மாத காலமாக உடல்நலம் குன்றி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வரும் 83 வயது மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக உறவினர்கள் உதவியுடன் அவசர ஊர்தியில் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்ததை கண்டு இளம் வாக்காளர்கள் வியந்து போயினர்.

தமிழ்முத்து

Exit mobile version