Madras Kural

மாம்பாக்கம் ஊராட்சியின் மனிதநேயர் வீராசாமி…

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சியின் மனிதநேயராகவே தங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் இருக்கிறார் என்று பெருமிதம் கொள்கின்றனர் பொதுமக்கள்.

செங்கல்பட்டுமாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் மாம்பாக்கம் வீரா என்கிற வீராசாமி. மாம்பாக்கம் ஊராட்சியானது மூன்றாயிர வீடுகளை உள்ளடக்கியது, ஐந்தாயிர மக்களின் வாழ்விடமாக இருப்பது… குடிசைகளும் உண்டு, அடுக்கு மாடி குடியிருப்புகளும் இங்கு உண்டு.

ஊராட்சி மன்றத்தின் கடந்த காலத்தின் துணைத் தலைவரான மாம்பாக்கம் வீரா(எ)வீராசாமிதான் தற்போது உள்ளாட்சி மன்றத்தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகி இருப்பவர். மாம்பாக்கம் ஊராட்சியில் வாழ்கிற பொது
மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக செய்து வரும், வீராசாமி, தலைவராக பதவி ஏற்றவுடன் இன்னும் வேகம் காட்ட ஆரம்பித்து விட்டார். சாலை, குடிநீர், மின்விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி பாராட்டுகளைப் பெறத் தொடங்கி விட்டார்… மாம்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் எளிய மக்களின் குடும்பத்தில் ஏற்படும் இறப்பு நிகழ்வுகளில் எப்போதுமே தனி கவனம் செலுத்துகிறவர் வீராசாமி என்கின்றனர். சொர்க்க ரதம் எனப்படும் அமரர் ஊர்தி வாகனம், குளிர்பதனப்பெட்டி, கூலர் பாக்ஸ்,15×30 அடிநீள அகலம் கொண்ட சாமியனா பந்தல், ஐம்பது நாற்காலி, இரண்டு ஃபோகஸ் லைட்டுகள், ஐந்து டியூப் லைட்டுகள் 5-எண்ணிக்கை கொண்ட டியூப்லைட் ஆகியவற்றை பயன்பாட்டுக்காக சொந்த செலவில் வாங்கி வைத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடுத்திருக்கிறார். மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரான வீரா என்கிற வீராசாமி என்ன சொல்கிறார்? : “எதிர்பாராத இறப்பு ஏற்படும் பட்சத்தில் குறைந்த பட்சம் ரூ. 20ஆயிரம், அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. நாற்காலி, பந்தல், ஃபோகஸ் மற்றும் டியூப் லைட்டுகள், இறுதி ஊர்வலத்தேர், ஃப்ரீசர் பாக்ஸ்களுக்கு அதிக செலவாகிறது. எளிய மக்கள் இச்செலவை எதிர்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்… இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான், இந்தப் பொருட்களை வாங்கிக்கொடுத்துள்ளேன். பாகுபாடு இன்றி இவையனைத்து பொருட்களும் அனைவருக்கும் வழங்கப்படும்” என்றார்.

மாம்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் வாழ்கிற பொதுமக்கள் கூறும்போது, “தலைவர் வீராவை
எங்கள் குடும்பத்தில் ஓருவராக கருதுகிறோம். அவர் எங்களின் சுக-துக்கங்களில் பங்கேற்பார். கடினஉழைப்பாளி. எங்களின் நிலையறிந்து இத்தகைய பெரும் உதவியை செய்து கொடுத்து வருவதால் எங்களின் மனக்கவலை தீர்ந்துள்ளது” என்றே கூறலாம் அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்” என்றனர். இதே புகழோடு, எந்நாளும் இடறாமல் தளராமல் தலைவர் வீரா, பணியாற்றிட வேண்டியும் வாழ்த்தியும் விடைபெற்றோம்.

– பிரீத்தி எஸ். –

Exit mobile version