செங்கற்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி, கருங்குழிப்பள்ளம் அரிசன நல குடியேற்பு கூட்டுறவு சங்கத்திற்கு பட்டா வழங்கக்கோரி, வி.சி.க. நிர்வாகிகள்; வருவாய் (ம) மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய விசிக தொண்டரணிச் செயலாளர் சிறுத்தை வீ. கிட்டு, “நிலம் சம்மந்தப்பட்ட அனைத்து விவரங்களையும், அப்போது அமைச்சரிடம் தெரிவித்த நிர்வாகிகள், கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திரு. தொல்.திருமாவளவன் எம்.பி., இதுகுறித்து முன்னதாக கடிதம் வழங்கியதின் பேரில், மாண்புமிகு அமைச்சர், நில நிர்வாக ஆணையத் (CLD) துறைக்கு பரிந்துரை செய்தும் கடிதம் வழங்கியுள்ளார்.
அமைச்சருடனான சந்திப்பின்போது, வி.சி.க.வின் கருத்தியல் பரப்புச்செயலாளர் அண்ணன் சிபிசந்தர் மற்றும் நானும் உடன் இருந்து தொடர்ச்சியாக இந்த களப்பணியில் எழுச்சி தமிழர் வழிக்காட்டுதலின் , பேரில் ஈடுபட்டு வருகிறோம். நிலமீட்பு என்பது எமது உரிமை. இழந்த நிலத்தினை மீட்டெடுப்போம். இறுதிவரை போர்தொடுப்போம். எழுச்சி தமிழருடன் இணைந்து என்றும் களமாடுவோம்” என்று குறிப்பிட்டார்.
பிரீத்தி எஸ்.