
ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பின் (UNICEF) தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா. சபை குழந்தைகள் நல நிதியமான யூனிசெஃப்பின் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், “குழந்தைகள்தான் நமது மிகப்பெரிய எதிர்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை” என்று சமூக வலைதளப்பதிவில் கீர்த்திசுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் UNICEF அமைப்பானது, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பாதுகாப்பு உரிமைகள்; குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.