Madras Kural

மரம் வளர்த்து அறம் செய்தவர்| 114 வயது திம்மக்கா மறைவு|

மரம் வளர்ப்போம் காடுகளை காப்போம் என்ற கோஷங்கள் ஊர் முழுக்க கேட்டாலும், அவை வெற்று விளம்பரமாக கிடக்கின்றன. கோஷங்களையும், அறை கூவல்களையும், நிசப்படுத்தியவர்
சாலுமரதா திம்மக்கா.

கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தின் கூப்பி என்ற கிராமத்தில் பிறந்தவர்.
விவசாயக்கூலி. கணவர் திக்கையாவும் விவசாயக்கூலிதான். திம்மக்கா எப்போது மரம் நடத்தொடங்கினாரோ தெரியாது. “நினைவு தெரிந்த நாளில் இருந்து மரம் நடுகிறேன், மரங்களை அகற்ற நின்றவர்களோடு மல்லுக்கு நின்று தடுத்தி நிறுத்தியிருக்கிறேன்” என்று தன் விளக்கம் பேசும் திம்மக்கா, மரங்களைக் காப்பாற்ற பலமுறை கர்நாடக மாநில முதலமைச்சர்களையே எதிர்த்து நின்றிருக்கிறார்.

மரம் – செடி கொடிகளை பிள்ளைகளாக கொண்டாடித் தீர்த்ததாலோ என்னவோ திம்மக்கா- திக்கையா தம்பதியருக்கு மரங்கள்தான் குழந்தைகள்.”

வாழ்நாளில் பல கிலோமீட்டர் நீள அகலங்களில் மரங்களை நட்டு வைத்து இயற்கையை காப்பாற்றி கொண்டாடிய திம்மக்காவுக்கு பத்மஸ்ரீ விருது தேடி வந்து அலங்கரித்தது. வாழ்நாள் முழுவதும் ‘மர’ குழந்தைகளோடு வாழ்ந்து 114- வது வயதில் மரங்கள் சூழ அமைந்திருக்கும் அழகான குடிலில் இயற்கையோடு கலந்தே விட்டார் திம்மக்கா. உலகின் தலைசிறந்த நூறு பெண்மணிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட திம்மக்காக்கள் தான் இந்த நாட்டின் உயிர் விதைகள்…

நபாசே

Exit mobile version