Madras Kural

டிரான்ஸ்போர்ட் வெப்சைட் குளறுபடி !

சாலைகளின் தோற்றம்

மத்திய – மாநில அரசுகளின் இணைய தள (வெப் சைட்) குளறுபடிகளால் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய இடத்தில், 50 ஆயிரம் செலுத்தும்படி, வெப்சைட் காட்டுவதாய் புகார் எழுந்துள்ளது!
சமூக ஆர்வலர், ‘விகடகவி’ எஸ்.கந்தசாமி, இது குறித்து நம்மிடம் பேசினார். அதன் சுருக்கம் : மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகத்தால் 01.04.2022- முதல் பழைய வாகனங்களுக்கு பதிவுச்சான்று புதுப்பித்தல் (R.O of R.C) தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை ஜனவரி 2022 – ல் மத்திய போக்குவரத்துத் துறை, இணையத்தில் (NIC) வெளியிட்டது.

டூ வீலர்களுக்கு (மாதத்திற்கு) 300 ரூபாய், ஃபோர் வீலர்களுக்கு (மாதத்திற்கு) 500 ரூபாய் என்பதே வரையறை. அதுவே போக்குவரத்துத்துறை வாகனம் என்றால் நாளொன்றுக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட (01.04.2022 -) நாளிலிருந்து திருத்தி அமைக்கப்பட்ட யாதொன்றும் இணையத்தில் (NIC) (அப்டேட்) ஆகாமலே இருக்கிறது.
“பழைய அபராதம் நாங்கள் சேர்த்து வாங்க மாட்டோம், எல்லாக் கணக்குகளும் 01.04.2022- லிருந்தே பற்றில் (கணக்கில்) வைக்கப்படும்” என்று, மத்திய அரசு சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம், இணையம் (NIC) மூலம் அறிவிப்பு செய்திருந்தது.

500 ரூபாய் அபராதம் 50 ஆயிரம் ஆனது…

இந்நிலையில்தான் இணையத்தில் (NIC) நுழைந்து அபராதக் கட்டணம் செலுத்தப் போனவர்களுக்கு 30 ஆயிரத்தில் தொடங்கி லட்ச ரூபாய்க்கு அபராதத் தொகை செலுத்தும்படி இணையம் காட்டுகிறது. “பழைய அபராதம் நாங்கள் சேர்த்து வாங்க மாட்டோம், எல்லாக் கணக்குகளும் 01.04.2022- லிருந்தே பற்றில் (கணக்கில்) வைக்கப்படும்” என்ற அரசின் அறிவிப்புக்கு மாறாகவே இணையம் முரண்டு பிடிக்கிறது.
இதுபற்றி போக்குவரத்துத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற காரணத்தால் மீண்டும் மத்திய அரசு போக்குவரத்துத்துறை, 01.04.2022 -ம் ஆண்டுக் கணக்கிலிருந்துதான் அபராதத்தொகை பெற வேண்டுமென்று மாநில போக்குவரத்துத் துறைக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தது. ஆனால் பழைய கதையே மீண்டும் தொடர்ந்தது.
மாநில போக்குவரத்து அலுவலகம் மற்றும் யூனிட் ஆபீஸ் மூலம் டிரான்ஸ்போர்ட் டெபுடி கமிஷனர் (1) – அவர்களின் கவனத்துக்கு பல புகார்கள் சென்றும் நடவடிக்கை ஏதும் இல்லை. மாநில போக்குவரத்துத் துறையும் மத்திய போக்குவரத்துத்துறை (NIC) யும், கணினி (கம்ப்யூட்டர் – டிரான்ஸ்போர்ட் வெப் சைட்) ஏரியாவை உரிய முறையில் பராமரிக்காமலும், அப்டேட் செய்யாமலும் விட்டதின் எதிரொலி, இன்று பல லட்ச வாகன ஓட்டிகளின் தலையில் மொத்தமாய் விழுந்துள்ளது.
பொதுமக்கள் அரசாங்கத்தின் இணையத்தை தேடிப்போய் அபராதம் – நிலுவைக் கட்டணங்களை செலுத்தத் தயாராக இருந்தாலும் சிஸ்டம் சரியில்லாமல் போனால்? பயனாளியிடம் நியாயமாய் பெறவேண்டிய அபராதக் கட்டணத்தை மக்களே தேடிப் பிடித்து கொடுக்க வந்தாலும் அரசின் அப்டேட் இல்லாத வெப்சைட், கஜானாவை நிறைய விடாமல் பார்த்துக் கொள்கிறது என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.
டிஜிட்டலை நோக்கியே பரிவர்த்தனை எல்லாமும் என்று நெஞ்சை நிமிர்த்தும் அரசாங்கத்தின் விளம்பரங்களைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது…

இன்னும் நிறையவே சொல்கிறார்
விகடகவி எஸ். கந்தசாமி!
கேப்பீங்களா சாமீ?

Exit mobile version