
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆணையத்தின் அடுத்த தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களை, எழுத்துத் தேர்வு (ம) நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வு செய்து நிரப்பி வருகிறது. அந்த வகையில், TNPSC 2026-ஆம் ஆண்டு நடத்தவுள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை எப்போதும் போன்றே இப்போதும் முன்கூட்டியே வெளியிட்டு உள்ளது.
அந்த அறிவிப்பில், “குரூப் -1 தேர்வு குறித்த அறிவிப்பு, 2026 ஜூன் 23 -ஆம் தேதி வெளியாகிறது. தேர்வு, செப்டம்பர் 6 -ஆம் தேதி நடக்கிறது. அடுத்தது, குரூப் – 4 தேர்வு குறித்த அறிவிப்பு அக்டோபர் 6 -ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான தேர்வு, டிசம்பர் 20- ஆம் தேதி நடக்கிறது. அதேபோல் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 25 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும்” என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
2026-ம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியெஸ்கேபி