Madras Kural

பக்தர்களை பதறவைத்த திருப்பதி டிஜிட்டல் திரை!

திருப்பதி தேவஸ்தான நிகழ்ச்சிகள், டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது திடீரென திரையில் இந்தி திரைப்பட குத்துப்பாடல்கள் ஒளிபரப்பாகவே பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

https://madraskural.com/wp-content/uploads/2022/04/WhatsApp-Video-2022-04-24-at-5.02.36-PM.mp4


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்றாடம் ஏழுமலையானுக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் தீபாராதனை நடப்பது வழக்கம். பக்தி சொற்பொழிவுகள், பஜனைகள் போன்ற நிகழ்ச்சிகள், தேவஸ்தான தொலைக்காட்சி மூலம் நேரடியாக அப்போது டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தர்கள் நிகழ்ச்சிகளை காண்பதற்காக கோவில் வளாகம், அன்னதான கூடம், தங்கும் இலவச அரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று பக்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது திடீரென திரையில் இந்தி திரைப்படக் குத்துப் பாடல் காட்சிகள் தோன்றியது. அதன் பின்னணி ஆடியோவில் பக்திப் பாடலும் அதே நேரத்தில் ஒளிபரப்பான தால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 45 நிமிடம் வரை திரைப்படங்கள் தொடர்பான காட்சிகளே டிஜிட்டல் திரையில், ஒளிபரப்பானது, பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதுபற்றி திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கவனத்திற்கு பக்தர்கள் கொண்டு சென்றதால் ஒலிபரப்பு அவசரகதியில் நிறுத்தப்பட்டது. இதுபற்றி தேவஸ்தான கூடுதல் தலைமை அதிகாரி தர்மா ரெட்டியிடம் கேட்டபோது, “நிகழ்ச்சி ஒளிபரப்பு அரங்கில் இருந்த ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவே இந்த தவறு நிகழ்ந்ததாகவும் இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தேவஸ்தான பக்தி நிகழ்ச்சியின்போது டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பான திரைப்பட காட்சிகள், சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

-தேனீஸ்வரன் –

Exit mobile version