திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (12.09.2023) விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்றவை குறித்து ஆலோசிக்கப் பட்டன.
விநாயகர் சிலைகளை நிறுவுதல், ஊர்வலம் மற்றும் சிலைகளை கரைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் எஸ்.பி. பா.சீபாஸ் கல்யாண், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ் ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ந.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ)/ மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெ.ஹஷ்ரத்பேகம் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
பொன்.கோ.முத்து