Madras Kural

ஜாலியாய் ஊர்சுற்ற ஜோடி போட்டு திருட்டு !

பொதுவாகவே ரயில்வே ஸ்டேசன், பஸ் டெப்போ, பெரிய பெரிய ‘மால்’ கள்ல போலீஸ் டீம் கண்காணிப்புல சீரியசா இருப்பாங்க ! சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன்ல அப்படிப்பட்ட கண்காணிப்புல இரண்டு பேர் சிக்கியிருக்காங்க. முதற்கட்டமா நடந்த விசாரணையில அவங்க ஆவடி ஜெயஸ்ரீ திருவொற்றியூர் பார்த்திபன்ங்றது போலீசுக்கு தெரிய வந்திருக்கு… “நாங்க, லவ்வர்ஸ்… ஜாலியா ஊர்சுத்த கையில் பணம் ஏதும் இல்லை. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன்ல சுத்துவோம். ரயில்வே ஸ்டேசனுக்கு வர்றவங்களோட செல்போனை திருடுவோம், அந்த செல்போன்களை வித்து கிடைக்குற பணத்த கையில வச்சுக்கிட்டு ஜாலியா ஊர்சுத்துவோம்” ன்னு போலீஸ் விசாரணையில லவ்ஜோடி ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்காம். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப் இன்ஸ்பெக்டர் சாமண்னன் ஆகியோர் விசாரணை நடத்தி லவ் ஜோடிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இப்படியும் ஒரு லவ்வு ! ராதாராணி

Exit mobile version