Madras Kural

‘டி பேட்டு’களுக்கு கடிவாளம் !இறுக்குகிறது மத்திய அரசு…

தொலைக்காட்சிகளில் “குற்றம் குறித்த பின்னணி” களை, அரசியல் விவகாரங்களை ‘ஒலி – ஒளி’ பரப்பு செய்வதில் எதிர்பாராத சில பின் விளைவுகள் ஏற்பட்டு விடுகிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக மாறி, தொலைக்காட்சிகளில் தலை காட்டிய பிரபல நடிகைகள், ஸ்டூடியோவுக்குள் வைத்தே எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்ட எஸ்டீடியெல்லாம் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது.


தன் குடும்பத்தைப் பற்றி பதிவு செய்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளி – ஒலி பரப்பு செய்ய கூடாது என்று, மாலைமுரசு பத்திரிக்கை -தொலைக்காட்சி அலுவலகம் முன்பு ஒரு பெண் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப் பட்டிருப்பது ஏப்ரல் 2022- ல் நிகழ்ந்துள்ள சம்பவம். சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமலாம்பிகை. இவருடைய தம்பி லிங்கேஸ்வரன். திருமணமானவர். லிங்கேஸ்வரனின் மனைவி பார்வதி. தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மேகவர்த்தினி என்ற பெண்ணுடன் லிங்கேஸ்வரன், தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, லிங்கேஸ்வரன் மனைவி பார்வதி 2021- டிசம்பர் மாதம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் லிங்கேஸ்வரன், மேகவர்த்தினியை 2021-பிப்ரவரி மாதமே பதிவுத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இரண்டு குடும்பத்தாரின் மத்தியிலும் இந்த விவகாரம் பெரிதாகவே, மேகவர்த்தனி ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு லிங்கேஸ்வரனை விட்டுப் பிரிந்து செல்வதாக எழுதிக் கொடுத்து சென்றுவிட்டார் என தெரிகிறது.
இதற்கிடையில் லிங்கேஸ்வரன் மீண்டும் தன்னுடன் வாழவேண்டும் என்று வற்புறுத்தி மாலை முரசு தொலைக்காட்சி நடத்திவரும் ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற நிகழ்ச்சியில் மேகவர்த்தினி கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியின் (Promo) முன்னோட்டம், 2022 ஏப்ரல் 22-ஆம் தேதி, டி.வி.யில் வெளியானதைப் பார்த்ததும், லிங்கேஸ்வரனின் அக்கா கமலாம்பிகை பதறிப்போனார். அண்ணாசாலையிலுள்ள மாலைமுரசு அலுவலகத்திற்கு நேரில் சென்று, இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யக் கூடாது என்று கூறி, அவர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை, உடல் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது அங்கிருந்த மாலைமுரசு பாதுகாப்பு அலுவலர் கலையரசன், கமலாம்பிகையோடு துணையாய் வந்திருந்த அவர் தந்தை மோகன் ஆகியோர் தடுத்து நிறுத்தி, போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்துவிட்டு மறுநாள் காலையில் போலீஸ் ஸ்டேசனுக்கு விசாரணைக்கு வரும்படி கமலாம்பிகையை அனுப்பி வைத்தனர். “நடந்தது என்ன, பின்னணி என்ன?” என்று விவாதிக்கும் நிகழ்ச்சியாளர்கள் மத்தியில் இந்த சம்பவம் சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் தகவல் ஒலி பரப்புத்துறை அமைச்சகம் இதுகுறித்து ஓர் அறிவுரையை வெளியிட்டுள்ளது. “தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதையும், அவதூறான தலைப்புச் செய்திகளை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிகாரப் பூர்வமற்ற, தவறான செய்திகள் வெளியிடுவதையும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மொழிகளை பயன்படுத்துவதையும் கண்டறிந்தது.

உக்ரைன்- ரஷ்யா விவகாரம், தில்லி வடமேற்கு பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஆகியவை குறித்து நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சியானது நெறிமுறை கோட்பாட்டை மீறியதாக இருந்துள்ளது. வன்முறை சம்பவக் காட்சிகள் ஒளிபரப்புவதன் மூலம் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும். இட்டுக்கட்டப்பட்ட தலைப்பு செய்திகள் சமூக விரோத செயலுக்கு வழிவகுப்பதாக அமையக் கூடாது, கெடு வாய்ப்பாக அப்படி அமைந்துள்ளது. தேவையற்ற விவாத (டிபேட்) நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கையாக இது போன்று பல்வேறு அறிவுரைகளை (அறிக்கை : படத்தில் காண்க) விடுத்துள்ளது.

-ஏ.எஸ்.ராஜ். –

Exit mobile version