Madras Kural

ஊருக்கு ஒரு ‘வாத்தியார்’ இப்படி கிடைக்கணும்…

மாணவர்களின் நலனுக்காகவே வாழ்கிறார் ஏழுமலை. திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு மேனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஏழுமலை, அப்படி என்னதான் செய்து விட்டார் ?

தான் பணிபுரியும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர் அனைவருமே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கோடு சொந்த செலவில் நாள்தோறும் காலை உணவளித்து வருகிறார், ஏழுமலை.

திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, இங்கு ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியரான ஏழுமலை தமது பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும், 10-ஆம் வகுப்பு
பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில், சோர்வின்றி உடல் வலிமையுடன் அவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ள காலை உணவாக பொங்கல், இட்லி, வடை ஆகியவற்றை தனது சொந்த செலவில் அத்தனை மாணவ மாணவிகளுக்கும் வழங்கி வருகிறார். இதனால் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். தலைமை ஆசிரியரின் இந்த செயலால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும், தனது ஊதியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி தன்னிடம் கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகளின் அறிவுப் பசியானது, வயிற்றுப் பசியால் தடைப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கோடு செயல்படும்
தலைமை ஆசிரியர் ஏழுமலையின் சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பொன்.கோ.முத்து

Exit mobile version