Madras Kural

ஜனன ஜாதகத்தில் செவ்வாய் -சந்திரன் கெட்டால் என்னாகும்?

(தொடர் பதிவு -6 கிரகங்களும், தடை தாமதங்களும்)

ஜோதிட சாஸ்திரம் ஒரே நாளில் உருவாகி விடவில்லை. பல நூற்றாண்டு காலம் பல ரிஷிகள் தங்களது ஊன் உறக்கம் இழந்து வானத்தை பார்த்து கிரகங்களின் சஞ்சாரத்தை கண்டுபிடித்து உருவாக்கியது ஆகும். அப்படி அவர்கள் ஆராய்ந்த போது எந்த கிரகத்தில் இருந்து வெளிப்படும் எந்த வகையான கதிர் மனிதர்களின் உடலில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்து அதன்பிறகே அந்த கிரகங்களுக்கான பொறுப்புகளை கொடுத்துள்ளார்கள். இதைத்தான் கிரகங்களின் காரகத்துவம் என்று கூறுகிறோம்.
இந்த காரகத்துவங்கள் பற்றி முழுமையாக தெரிந்தால்தான், அந்த கிரகங்களால் ஜாதகருக்கு என்ன பாதிப்பு வரும் என அவர்கள் ஆராய்ந்த போதுதான் எந்த கிரகத்தில் இருந்து வெளிப்படும் எந்த வகையான கதிர் மனிதர்களின் உடலில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்தனர். அதன்பிறகே அந்த கிரகங்களுக்கான பொறுப்புக்களை கொடுத்தனர். இதைத்தான் கிரக காரகத்துவம் என்று கூறுகிறோம்.
இந்த காரகத்துவங்கள் பற்றி முழுமையாக தெரிந்தால்தான், அந்த கிரகங்களால் ஜாதகருக்கு என்ன பாதிப்பு வரும் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று கண்டுபிடிக்க முடியும்.
சிலர் கூறுவது எனது நண்பரின் மகனுக்கு திருமணம் தாமதம் ஆனது, அவர் குருவுக்கு பரிகாரம் செய்தார்; எனது மகனுக்கும் திருமணம் தாமதம் ஆவதால் நானும் குருவுக்கு அதேபோல் பரிகாரம் செய்தேன்; ஆனால் எனது மகனுக்கு திருமணம் ஆகவில்லை பரிகாரம் பலன் அளிக்க வில்லை என்று சொல்கிறார்கள்! இங்கு ஒரு ஜாதகரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களினால் ஏற்படும் பாதிப்பும் மற்றவர் ஜாதகத்தில் உள்ள கிரகங்களினால் ஏற்படும் பாதிப்பும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதை அவர்கள் புரிந்து கொண்டு செயல் படாததுதான் இதற்கு காரணம்.
அதனால்தான் லக்னம் பற்றியும், கிரகங்களின் காரகங்கள் பற்றியும் முழுமையாக அறிந்து அதன் பிறகு பரிகாரங்கள் செய்யவேண்டும்.
சூரியன் –ஒருவரது ஜாதகத்தில் கெட்டுவிட்டால், அந்த ஜாதகருக்கு அதிகாரம், அந்தஸ்து கிடைப்பதிலும், தந்தையுடன் கருத்து வேற்றுமை ஏற்படுவது, தந்தையால் உதவிகள் கிடைக்காமல் இருப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும். தடைகளும் தாமதங்களும் ஏற்படும். அவர் 7 ம் அதிபதியாக இருந்தால் திருமணம் பாதிக்கும், 4 ம் அதிபதியாக இருந்தால் வாகனம், வீடு கட்டுவதில் தடைகள் ஏற்படும். இதற்கு அவர் எந்த பாவத்தின் அதிபதி என்று பார்க்க வேண்டும். ஜனன ஜாதகத்தில் சூரியன் கெட்டால் சூரியனுக்கு உரிய பரிகாரத்தை செய்வதன் மூலம் அந்த தடை தாமதங்கள் விலகும். சந்திரன் – ஜனன ஜாதகத்தில் கெட்டுவிட்டால், தாயார் வழியில் பிரச்சனைகள், மன குழப்பம் போன்றவை ஏற்படும். மேலும் இவர் எந்த பாவத்தின் அதிபதியோ அந்த பாவத்தின் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். இதற்கு சந்திரனுக்கு உரிய பரிகாரங்களை செய்யவேண்டும்.
செவ்வாய் – ஜனன ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுவிட்டால் பூமி வாங்குவதில் தடை தாமதங்கள் உண்டாகும். சகோதர வழியில் கிடைக்கும் உதவிகள் தாமதப்படும், அல்லது கிடைக்காமல் போகலாம். மேலும் இவர் எந்தபாவத்தின் அதிபதியோ அந்த பாவத்தின் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். இதற்கு செவ்வாய்க்கு உரிய பரிகாரங்களை செய்யவேண்டும்.

புதன் – ஜனன ஜாதகத்தில் கெட்டு விட்டால் அறிவு மங்கும். தாய்மாமன் உறவில் பாதிப்பு மற்றும் அவரால் கிடைக்கும் உதவிகளில் தடை , நரம்பு சம்பந்தப்பட்ட நோய் போன்றவை ஏற்படும். இதற்கு புதனுக்குரிய பரிகாரங்களை செய்ய வேண்டும். மேலும் இவர் எந்த பாவத்தின் அதிபதியோ அந்த பாவத்தின் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். இதற்கு புதனுக்கு உரிய பரிகாரங்களை செய்யவேண்டும்.

குரு – ஜனன ஜாதகத்தில் கெட்டு விட்டால் புத்திரபாக்கியத்தில் தடை தாமதங்கள் ஏற்படும். பண வரத்தில் தடை தாமதம் உண்டாகும். இதற்கு குருபகவானுக்கு உரிய பரிகாரங்களை செய்யவேண்டும். மேலும் இவர் எந்த பாவத்தின் அதிபதியோ, அந்த பாவத்தின் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். இதற்கு குருவுக்கு உரிய பரிகாரங்களை செய்யவேண்டும்.
சுக்ரன் – ஜனன ஜாதகத்தில் கெட்டு விட்டால் திருமணம் தாமதமாகும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். மேலும் இவர் எந்த பாவத்தின் அதிபதியோ அந்த பாவத்தின் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். இதற்கு சுக்கிரனுக்கு உரிய பரிகாரங்களை செய்யவேண்டும்.
சனி – ஜனன ஜாதகத்தில் கெட்டுவிட்டால் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் .. உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் தாமதமாகும். மேலும் இவர் எந்தபாவத்தின் அதிபதியோ அந்த பாவத்தின் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். இதற்கு சனிக்கு உரிய பரிகாரங்களை செய்யவேண்டும்.
அடுத்ததாக ராகு, கேது ஆகிய நிழல் கிரகங்கள் எந்த கிரகத்துடன் இணைகின்றனவோ அல்லது பார்க்கின்றனவோ அந்த கிரகத்தின் காரகத்துவம் மற்றும் அந்தகிரகம் எந்த பாவத்திற்கு அதிபதியோ அந்த பாவத்தின் செயல்களையும் தாமதப்படுத்தும். அதனால் கிரகங்களுக்கு பரிகாரம் செய்யும் போது இந்த நிழல் கிரகங்களுக்கும் சேர்த்து பரிகாரம் செய்யவேண்டும்.. இதேபோல் மற்ற கிரகங்களுடன் சனி சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்த்தாலோ அந்த கிரகத்துடன், சனிக்கும் பரிகாரம் செய்ய வேண்டும்.
பரிகாரம் ஏன்பது அந்த கிரகத்தை திருப்தி படுத்துவது என்று புராணங்களில் கூறப்பட்டாலும் அறிவியல் ரீதியாக அந்த கிரகத்தில் இருந்து வெளிப்படும் கதிரிவீச்சை உடலுக்கு சரியாக கிடைக்க செய்வது என்றே கூறப்படுகிறது. குறிப்பிட்ட கிரகத்தின் சன்னதியில் விளக்கு ஏற்றுவது, அந்த கிரகங்களுக்கு உரிய தானியங்களை நமது உடலில் வைத்து கட்டிக்கொள்வது, குறிப்பிட்ட கிரகத்துக்கு உரிய சமித்துக்கள் மற்றும் இதர பொருட்களை கொண்டு யாகங்கள் வளர்த்து அந்த புகையின் மூலம் கதிர் வீச்சை பெறுவது போன்றவையாகும். இங்கு கிரகம் கெட்டு விடுவது என்றால் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழும். ஜனன ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்களான லக்னத்தில் இருந்து 3,6,8,12 ஆகிய வீடுகளில் கிரகங்கள் இருப்பது, நீச்சம் அடைவது, பகைவர் வீட்டில் இருப்பது, தீயகிரகத்தின் சேர்க்கை, பார்வை ஆகியவற்றால் அந்த கிரகம் கெடுகிறது என்று சொல்லலாம்.
(விரிவாக அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.)

கட்டுரையாளர்: ஜோதிட ரத்னா, பஞ்சாங்க கணிதமணி, பூம்புகார் ஜி. ஸ்ரீனிவாசன் M.A (Astrology) தொடர்புக்கு: வாட்சப் எண்: 9499902400 – கைபேசி > 9080082200-

Exit mobile version