Madras Kural

தலைவர்களின் சிலைகள்! முதலமைச்சர் ஆய்வு…

மீஞ்சூர் – புதுப்பேடு பகுதியிலுள்ள சிற்பி தீனதயாளன் சிற்பக்கூடத்தில் அண்ணா, கருணாநிதி, வி.பி.சிங் ஆகியோரின் சிலைகள் வடிவமைக்கப் பட்டு வருகிறது.

சென்னை அண்ணா அறிவாலயம் (ம) ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் இந்த சிற்பக் கூடத்தில் உருவாக்கப் பட்டவை. முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, அண்ணா ஆகியோரது சிலைகள் இங்கு, தற்போது தயாராகி வருகின்றன. இந்த சிலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்டமாக, களிமண் மாதிரியால் செய்யப்பட்டுள்ள சிலைகளின் மாதிரிகளை அவர் பார்வையிட்டார். சிலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து சிற்பிக்கு தெரிவித்தார்.

முதலமைச்சர் ஆய்வு

இதனையடுத்து பிலாஸ்டர் ஆப் பாரீஸ், இறுதியாக வெண்கலத்தில் சிலைகள் தயாராக உள்ளன. வி.பி.சிங் முழு உருவ 9அடி வெண்கல சிலை மாநில கல்லூரியிலும், 3.5 அடி உயர வெண்கல கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகள், அவரவர் நினைவிடங்களில் அமைய உள்ளது. ஆய்வின் போது, அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராசன் உடனிருந்தனர்.

பொன்.கோ.முத்து

Exit mobile version