Madras Kural

மக்கள் பணியில் சோஷியல் மீடியா!

ஒட்டுமொத்த ஊடகங்களில் நான்கைந்து மட்டும் சும்மா இருக்க, எஞ்சியவை இந்தப் பெண்ணை வளைத்து வளைத்து நேர்காணல் நடத்திக் கொண்டிருக்கிறது.

உங்கள் கண்களின் ஜொலிப்புக்கு என்ன காரணம்? நாசிக்கும் உதட்டுக்கும் இத்தனை அழகு எப்படி உண்டானது? வில் புருவம் எப்படி சாத்தியப் பட்டது? மின்னலை ஓவர்டேக் செய்யும் கீற்றுப் புன்னகையின் பின்னால் சோற்றுப் பருக்கை மட்டும் இருக்கிறதா அல்லது சப்பாத்தி, சான்ட் விச் போல ஏதேனும் உண்டா? துருதுருவென உறுத்தல் தரும் விழிகளின் பின்னால் மறைந்திருக்கும் ரகசியத்தை பொதுமக்களுக்கு சொல்ல முடியுமா?

அடடா எத்தனை கேள்விகள்.

தன்னுழைப்பால் ஊசிமணி பாசிமணி கோர்த்து விற்று குடும்பத்தை நடத்தும் அடித்தட்டு நிலை பெண்ணொருவரின் மறுபக்கம் அறிந்து அதை வணிகமாக்கும் மனிதர்களின் மனிதத்தை நினைத்தால் தான் பகீர் என்கிறது.

மத்திய மாநில அரசாங்கத்தின் நிரந்தர குறைபாடுகளால் அன்றாடம் மக்கள் படும் அவதிகளைப் பேச ஆள்கள் இல்லை. அப்படி பேச துணிகிறவனை ஏதாவது ஒரு கும்பல் சாணிமொந்தை மீது தள்ளி, ‘தன்னையே சரியா இவனால கழுவ முடியல, ஊரை கழுவ வந்து விட்டான்’ என்று ஆரம்பித்து விடுகிறது.

நாட்டில் பேச ஒரு விஷயமும் இல்லை. எல்லாத் துறைகளும் Mister clean ஆக இயங்குகிறது. எல்லா மக்களும் லஞ்சம் கொடுக்காமல்தான் நியாயமான அனைத்து விஷயங்களையும் செய்து முடிக்கின்றனர்.

ஆகவேதான், “இப்படிப்பட்ட சங்கதிகளை தூக்கிப்பிடித்து எங்களை நாங்கள் தெம்பூட்டி மகிழ்ந்து கொள்கிறோம்”
இப்படித்தான் சொல்வார்கள்.

நல்லாயிருங்க.
நல்லாவேயிருங்க.

ந.பா.சேதுராமன்

Exit mobile version