Madras Kural

பங்குனி தேரோட்டமும் உற்சவ கொடியேற்றமும் !

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் பெருமான்
திருக்கோவில் பங்குனி தேரோட்டத்தில் பெருந்திரளாய் மக்கள் குவிந்ததால்
உற்சாகமும் பக்திப் பூரிப்புமாய் பக்தர்கள் காணப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் பெருமான் திருக்கோவிலின் பங்குனி உற்சவ
கொடியேற்றம் 2023- மார்ச் 27ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

ஏழாம் நாளான இன்று (03.04.2023) அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் எழுந்தருளிய அகத்தீஸ்வரப் பெருமானின் பக்தர்கள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற திருமந்திரத்தை முழங்கியவாறு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். செண்டை மேளம் முழங்க சிவாச்சாரியார்கள் சங்கொலி
எழுப்ப, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து சிவபெருமான் பக்தர்களுக்கு
அருளாசி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அகத்தீஸ்வரர் பெருமானுக்கும், ஆனந்தவல்லி தாயார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும்,
சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள் நடைபெற்றன.
நிறைவாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

பொன்.கோ.முத்து

Exit mobile version