Madras Kural

செவாலியே சிவாஜி கணேசன் பிறந்தநாள்விழா கொண்டாட்டம்!

தென்னிந்திய சினிமா நடிகர்களில் சுமார் 310 கோடி ரூபாயை, தான தர்மம் செய்த ஒரே நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் என்றொரு செய்தி கடந்த சிலநாள்களாக வைரல் ஆகி வருகிறது.
அக்டோபர் 1- ஆம் தேதி செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்த நாளை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கலைஞரின் கதை வசனத்தில் ஜொலித்த ‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 1952-ஆம் ஆண்டு என்ட்ரீ கொடுத்தவர் வி.சி.கணேசன். சிறப்பு விருந்தினராக, சத்ரபதி சிவாஜி நாடகத்தை காண வந்திருந்த தந்தை பெரியார், நாடகத்தில் அப்படியே ஒன்றிப்போனார். ‘இன்றுமுதல் நீங்கள் வி.சி.கணேசன் அல்ல, சிவாஜி கணேசன்’ என்றார். அன்றுதான் விழுப்புரம் சின்றாடியார் மகனான வி.சி.கணேசன், சிவாஜி கணேசன் ஆனார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்தவர் கலைக்குரிசில் சிவாஜி கணேசன்.தமிழ் சினிமா உலகில் 250 -க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்தவர் சிவாஜி மட்டுமே.


சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த விழாவில் கலைமாமணி பலகுரல் வித்தகன் நடிகர் சின்னி ஜெயந்த் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின்
சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.

நவீன் ஃபைன் ஆர்ட்ஸ் நவீன் பன்னீர்செல்வம், விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
மூத்த பத்திரிகையாளர், சமூக சேவகர் டாக்டர் சிராஜூதீன், சமூக சேவகர், ராயபுரம் பிஎஸ்என்எல் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேது

Exit mobile version