Madras Kural

வடசென்னை தமிழ் இளைஞர் கழகத்தின் விருது -விழா|

வடசென்னை தமிழ் இளைஞர் கழகம் 1942 -ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சென்னையின் மூத்த கழகம் ஆகும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஏவிபி ஆசைத்தம்பி, கலைஞர் மு.கருணாநிதி என பலர், திராவிட இயக்க கலந்தாய்வுக் கூட்டங்கள், தமிழ் வளர்ச்சிக் கூட்டங்கள் பல நடத்திய நினைவுப் பெருமை கொண்ட அமைப்பாக இன்றளவும் உள்ளது. அமைப்பின் சார்பில், சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்கா காலனியில் உள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளியில்
ஆசிரியரைப் போற்றுவோம் என்ற தலைப்பில் பேசிய மாணாக்கர்கள், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். அவர்களுக்கு பள்ளியின் தாளாளர்- வழக்கறிஞர் எம்.ஜெ.மார்டின் கென்னடி மற்றும் முதுநிலை ஆசிரியை எஸ். சியாமளா பரிசுகளை வழங்கினர். நிகழ்வுக்கு தலைமையேற்று நடத்திக் கொடுத்த இரா.இந்திரா பாலசண்முகம், முன்னிலை வகித்தும், வரவேற்றும், தி.வே.சு. திருவள்ளுவர், அ.ஆசைக்குமரன், மகேந்திர வர்மன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
அ.சி. மோத்திலால் பாபு, நற்றமிழ்க் கவிஞர் ந.பாபு, ரா. அழகேஸ்வரி, ந. சரவணன், எட்வர்ட்ராஜா, ஆசிரியர்- கவிஞர் தண்டபாணி, இணையவழி பாரதி தமிழ்ச்சங்கத்தின் தலைவர் செந்தமிழ்தாசன், வழக்கறிஞர் எல். முருகவேலு, பத்திரிகையாளர்கள், து.ரமேசு, ந.பா.சேதுராமன், மீடியா ராமு, எஸ்.எஸ். ஜெயமோகன், மேனாள் கவுன்சிலர் மு.சம்பத் என பலர் விழாவை சிறப்பித்தனர்.

பொதுநலச்செம்மல் விருதுகளை பத்திரிகையாளர் துரை.ரமேஷ், வணிகர் சங்க பிரமுகர்கள் ச.இராமர் மற்றும் மு.எட்வர்ட் ராஜா பெற்றனர். வரலாற்றறிஞர் விருது ஞானபாரதி, முனைவர் செந்தமிழ்தாசனுக்கும், திருக்குறள் பேராசான் விருது உ.இல.வள்ளுவ வாடாப்பூ அவர்களுக்கும் அதேபோல் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகள், வி.எஸ்தர் கிரேசி, செ.லிங்கேஸ்வரி, ப்பி. சரிதா, கனிமொழி கார்த்திகேயன் ஆகியோருக்கு சென்றது. இளம் சாதனையாளர் விருது, ப்ளஸ் டூ மாணவி ப்பி.சுஜித்ராவும், பைந்தமிழ்ச்செல்வன் விருதினை மாணவர் ஆ.சந்தோஷ் பெற்றனர். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சிறந்த கணிதப்பேராசானாக விளங்கும் கவிஞர் தமிழமுதனை பள்ளி நிர்வாகமும் மாணவர்களும் வரவேற்று மகிழ்ந்தது தொடக்கம் முதல் விழா முடியும் வரை சிறப்பாய் இனித்தது.

ந.பா.சே

Exit mobile version