Madras Kural

மரக்கன்றுகள் ஊன்றுதலும் மஞ்சப்பை விழிப்புணர்வும்…

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் தெற்கு ஒன்றியம் அலமாதி ஊராட்சி சார்பாக தந்தை பெரியார் சமத்துவ தாவரவியல் பண்ணையில் 10ஆயிரம் மரக்கன்று ஊன்றப் பட்டது.


அமைச்சர்கள் சா.மு.நாசர், சிவ.வீ. மெய்யநாதன், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோர், அடுத்த கட்ட நிகழ்வாக மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சி கல்வெட்டு திறந்தும் மரக்கன்றுகளை ஊன்றியும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ், அனைத்து நிகழ்ச்சியையும் சிறப்பாக கொண்டு சென்றிருந்தார். ஒன்றிய திமுக செயலாளர்(ம) ஒன்றிய துணை பெருந்தலைவர் மீ.வே. கருணாகரன், சுற்றுச்சூழல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஏ. காசிம்முகமது இரா.விஜயன், பா.சீனிவாசன் கி.வீரம்மாள், டி.ராஜி, கே.எம். துரைவேல், ஜி.சுப்பிரமணியம் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் கீதாராமன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் கே. தமிழ்வாணன விழா ஏற்பாட்டை செய்திருந்தார்.

-பிரீத்தி எஸ்.

Exit mobile version