Madras Kural

மறைந்தார் பத்திரிகையாளர் ‘பொன்னேரி’ புருஷோத்தமன்…

மக்கள் நலனுக்காக வாழ்ந்த
பத்திரிகையாளர் புருஷோத்தமன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். திரு. புருஷோத்தமன்
மறைவுக்கு திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும்
பொதுமக்கள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ‘மெட்ராஸ்குரல்’ இணையதளம் சார்பிலும்
எமது கண்ணீர் அஞ்சலியை
உரித்தாக்குகிறோம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி யைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர், திரு.புருஷோத்தமன். ’ஆனந்த சுடர்’ வார இதழ் ஆசிரியர். சுதேசமித்ரன், தினமலர், தினகரன் மற்றும் தினபூமி நாளிதழ்களில் நிருபராக சற்றேர 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத்துறையில் சிறப்பான
பங்களிப்பைக் கொடுத்தவர் புருஷோத்தமன். சமூக அக்கறையுடன் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் பிரச்சனைகளுக்கு
தீர்வு காண்பதில் தனித்த ஆர்வம் கொண்டவர். மாவட்டத்தின் ‘காட்டுப்பள்ளி – காலாஞ்சி’ யில் சாலை வசதி இல்லாததை தொடர்ந்து எழுதி அங்கே சாலைவசதி உள்ளிட்ட பல
வசதிகளை கொண்டு வந்து அந்த மக்களின் அன்மைப்பெற்றவர் புருஷோத்தமன்.
தினமலர் நாளிதழில் வந்த இரண்டுபக்க செய்திக்கட்டுரையின் மூலம் அதை நிறைவேற்றிக் கொடுத்தார் புருஷோத்தமன்.
பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த காட்டன் சூதாட்டம் குறித்து துணிச்சலுடன் செய்தி வெளியிட்டு அதை முடிவுக்கு கொண்டு வந்ததில் பெரும் பங்கு புருஷோத்தமனுக்கு இருக்கிறது. எல்.ஐ.சி. முகவராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் இதழியல்முதுகலை முடித்து நிருபராகி, மக்கள் நலனுக்காக சட்டமும் படித்து
கோர்ட்டுகளில் வாதாடி வாழ்க்கையை சிறப்பாக கொண்டு போனவர்
புருஷோத்தமன்.

தாம் சொந்தமாக நடத்திவந்த
’ஆனந்த சுடர்’ வார இதழில் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு எதிராக
தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு மணல் கொள்ளைகளை தடுத்து நிறுத்திய இயற்கை காதலன் புருஷோத்தமன் என்றால் அஃது மிகையல்ல…
பொன்.கோ.முத்து

Exit mobile version