Madras Kural

சாக்கடையாகும் நதிகள்! நேற்று கூவம்- இன்று வராகநதி…

வராகநதி என்றதுமே, ’வராக நதிக்கரையோரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன், புறாவே நில்லுன்னு சொன்னேன்’ என்ற சினிமாப்பாடல் நினைவில் வருவோர், அதே நினைவோடு வராகநதியைத் தேடி தேனி -பெரியகுளம் பக்கம் போய் விடாதீர்கள் என்றுதான் சொல்லத் தோணுகிறது.

தேனி மாவட்ட பெரியகுளம் நகரின் வற்றாத ஜீவநதி என போற்றப்படும் வராக நதிக்கு காசிக்கு அடுத்த புனித நதி என்ற அடையாளமும்
உண்டு, முன்னொரு காலத்தில்…

வெளிமாநிலக் கழிவுகள் நள்ளிரவில் வந்து அடைக்கப்படும் இடமாகவும்
உள்ளூர் கழிவுகள் பாதுகாக்கப்படும் இடமாகவும் வராக நதி இப்போது
மாறிப் போனதால், முடை நாற்றத்துக்குப் பஞ்சம் இல்லை.
நதிக்கரையோர மக்களுக்கு நோய்த்தொற்று அபாயமும்,
சுவாசக்கோளாறு இல்லாமல் வாழ முடியாத நிலையையும் உருவாக்கி வைத்துள்ளது சூழ்நிலை.
அரசாங்கங்கள் ஏதாவது செய்யும் நம்மைக் காப்பாற்றும் என்பது இரண்டாம் பட்சம். ‘வராக நதி உங்கள் நதி – நமது நதி’ என்ற உறுதியோடு உள்ளூர் மக்களே தூர்வாருதல், கழிவுகளை கொட்டாமல் காத்தல், தடுத்தல் என்று களத்தில் நின்றால், சென்னையின் ‘கூவம்’ சந்தித்துக் கொண்டிருக்கும் அவலத்தை
வராக நதிக்கு கொடுக்காமல் காப்பாற்றலாம்.
வாழ வைக்கும் நீர் நிலைகளை கொன்றொழித்து விட்டு நாம்
எப்படி சிறப்பாய் வாழ்வது என்று கொஞ்சமேனும் சிந்தியுங்கள்.

Exit mobile version