Madras Kural

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரெய்டு! முறைகேடானசொத்து பதிவு?

தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் வருமானத்திற்கு அதிகமான மதிப்பிலான சொத்தை வாங்கி ஆவணப்படுத்தியதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை செங்குன்றம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சொத்துகளை முறைகேடாக பதுக்கி பதிவு செய்ததாக கூறப்படும் விஐபி குறித்த விசாரணையும் தொடங்கி விட்டதாக மேலும் தகவல்கள் கிடைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு காலை 10 மணி அளவில் மூன்று மகிழுந்துகளில் (கார்கள்) வந்த, 12 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன், பத்திரப் பதிவு அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்தனர். சொத்து ஆவண பதிவு உள்ளிட்ட பல்வேறு பதிவுகளுக்காக காத்திருந்த பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டு சோதனையைத் தொடங்கினர்.

பின்னர் அலுவலகம் முழுவதும், மூன்று குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் வருமானத்திற்கும் கூடுதலான சொத்து ஆவணங்களை முறைகேடாக இங்கே பத்திரப் பதிவு செய்துள்ளதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

P.K.M

blob:http://madraskural.com/dd6d6760-d7eb-4d89-b7d4-ae8db8185457
Exit mobile version