Madras Kural

சார் பதிவு அலுவலக ரெய்டு…

பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகம்

திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

ரெய்டு காட்சி…

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த திடீர் சோதனையால் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட இதர பணிகளுக்காக இடைத் தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்தன.

சென்னை ஆலந்தூர் சரக லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் விஷ்வகுமார், நாகலட்சுமி ஆகியோர் தலைமையில் 12 பேரை கொண்ட போலீஸ் டீம் அதிரடி சோதனை நடத்தினர். 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு துறையினர் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளனர், இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பொன்கோ முத்து

Exit mobile version